கர படத்திலிருந்து வெளியானது வாயா ஏ கரசாமி பாடலின் லிரிக்கள் வீடியோ
Vaaya Ey Karasaami Lyric Video | தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கர. இந்தப் படத்தில் இருந்து முதல் சிங்கிள் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. கடந்த 2025-ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் வெளியான நிலையில் மூன்று படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கர. இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகி வரும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் சார்பாக தயாரிப்பாளர் ஐசரி கெ கணேஷ் தயாரித்து வருகிறார். தொடர்ந்து இவர்களின் தயாரிப்பில் உருவாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இந்த கர படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.




வெளியானது வாயா ஏ கரசாமி பாடலின் லிரிக்கள் வீடியோ:
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள இந்த கர படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து முதல் சிங்கிள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படத்திலிருந்து வாயா ஏ கரசாமி என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. மேலும் இந்த கர படம் வருகின்ற 30-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ரிலீஸ் தேதியுடன் ட்ரெய்லரை வெளியிட முடிவு செய்துள்ளது ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் படக்குழு
கர படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#KaraFirstSingle is #VaayaEyKarasaami 🧨
Out now ▶️ https://t.co/rwO4R9S8w7
A @gvprakash musical 🥁
🎙️ @Arunrajakamaraj @anthonydaasan #Satyan #VMMahalingam
🖊️ @Arunrajakamaraj#KaraFromApril30Directed by @vigneshraja89
Produced by @IshariKGanesh@dhanushkraja… pic.twitter.com/Jj1xlok4TU— Vels Film International (@VelsFilmIntl) March 14, 2026
Also Read… தனுஷுடன் புது படத்தில் ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட நடிகை? – அட இவர்தான்!