வேள்பாரி படத்திற்காக தனுஷிடம் இயக்குநர் சங்கர் வைத்த கோரிக்கை… என்ன தெரியுமா?
Director Shankars Velpari Movie Update: தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் சங்கர். இவரது இயக்கத்தில் உருவாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்ததாக இயக்க உள்ள படங்கள் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் சங்கர். இவரது இயக்கத்தில் வெளியாகும் பெரும்பான்மையான படங்கள் தொடர்ந்து மக்களிடையே இந்த உலகில் நடைபெறும் ஊழலை மையமாக வைத்தே திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றாலும் இறுதியாக இவரது இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் என அடுத்தடுத்து இரண்டு படங்களும் கலவையான விமர்சனத்தையேப் பெற்றது. இந்த நிலையில் இயக்குநர் சங்கர் அடுத்ததாக எந்தப் படத்தை எந்த நடிகரை வைத்து இயக்குவார் என்று தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து காண்ப்பட்டது.
இப்படி இருக்கும் நிலையில் இயக்குநர் சங்கர் அடுத்ததாக மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற வேல்பாரி என்ற நாவலை படமாக உருவாக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் பல நாட்களாக நடைப்பெற்று வந்த நிலையில் இந்தப் படத்தில் யார் நாயகனாக நடிக்க உள்ளது என்பது குறித்த தகவல்கள் கடந்த சில நாட்களாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
வேள்பாரி படத்திற்காக தனுஷிடம் இயக்குநர் சங்கர் வைத்த கோரிக்கை:
இந்த நிலையில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள வேள்பாரி படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வந்தது. இது தற்போது உறுதியாக உள்ள நிலையில் தனுஷிடம் இயக்குநர் சங்கர் இந்தப் படத்திற்காக இரண்டு ஆண்டுகள் கால் ஷீட் கேட்டுள்ளதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக உள்ள விக்கி கௌஷலிடம் மற்று நாயகன் கதாப்பாத்திரத்திற்காக சங்கர் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
Also Read… ஜிவி பிரகாஷ் குமாரின் ஹேப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? வெளியானது முதல் விமர்சனம்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
As Per VP,#Dhanush is almost finalized in the lead role for #VelPari but Shankar is asking almost 2 Years of Dates from Dhanush✌️
Also Shankar is in talks with Bollywood star #VickyKaushal (Chaava Fame) for another Hero role🤝 pic.twitter.com/cDuFmFVLKw
— AmuthaBharathi (@CinemaWithAB) March 13, 2026
Also Read… Jana Nayagan: விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் ஓடிடி உரிமை ரத்து? – படத்தின் நிலைமை இதுதான்!



