AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாடகி ஸ்ரேயா கோஷல் பர்த்டே ஸ்பெஷல்… ஜெய் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு

Actor Jai Posted Special Post For Shreya Ghoshal Birthday Special: பான் இந்திய அளவில் பிரபல பாடகியகா வலம் வருபவர் பாடகி ஸ்ரேயா கோஷல். இவரது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் ஜெய் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பாடகி ஸ்ரேயா கோஷல் பர்த்டே ஸ்பெஷல்… ஜெய் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு
பாடகி ஸ்ரேயா கோஷல்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Mar 2026 14:48 PM IST

இந்திய சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வருகிறார் பாடகி ஸ்ரேயா கோஷல். இவரது குரலில் வெளியாகும் பாடல்களுக்கு உலக அளவில் பல கோடி ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் சினிமாவில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான தேவதாஸ் என்ற படத்தின் மூலமாக பாடகியாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இந்திய மொழிகளில் பல மொழிகளில் இவரது குரல் ஒலிக்கத் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவிலும் பாடத் தொடங்கினார் ஸ்ரேயா கோஷல். அதனைத் தொடர்ந்து சுமார் 24 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பல நூறு படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். இவரது குரலுக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அதன் காரணமாகவே ஸ்ரேயா கோஷலின் குரலில் வெளியாகும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே தொடர்ந்து மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் ஸ்ரேயா கோஷலின் குரலில் தமிழ் சினிமாவில் மொத்தம் 4 படங்கள் வெளியாகி உள்ளது. இந்த 4 படங்களிலும் ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டிலும் தமிழ் சினிமாவில் பலப் படங்களில் கமிட்டாகி உள்ளார் ஸ்ரேயா கோஷல்.

ஜெய்யின் சட்டென்று மாறுது வானிலை படத்திலிருந்து ஸ்ரேயா கோஷல் குரலில் வெளியான பாடல்:

இந்த நிலையில் நடிகர் ஜெய் நாயகனாக நடித்துள்ள படம் சட்டென்று மாறுது வானிலை. இந்தப் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கில் சட்டென்று மாறுது வானிலை நேற்று வெளியிடப்பட்டு இருந்தது. இந்தப் பாடலை பாடகி ஸ்ரேயா கோஷல் பாடியிருந்தார். பாடல் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் அந்தப் பாடலை ஷேர் செய்து ஸ்ரேயா கோஷலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகர் ஜெய். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… எம்.ஜி.ஆர் குறித்து தவறான கருத்து தெரிவித்த தெலுங்கு நடிகர்… எதிர்ப்பு தெரிவித்த நடிகர் விஷால்

நடிகர் ஜெய் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் தனுஷ் 55 படம்… சென்னையில் தொடங்கியது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு!

Follow Us