AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கணவர் சோஹேல் கதுரியாவை விவாகரத்து செய்தார் நடிகை ஹன்சிகா மோத்வானி

Hansika Motwani Officially Divorced Her Husband Sohael Khaturiya: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை ஹன்சிகா மோத்வானி தனது கணவரை 4 ஆண்டுகால திருமண பந்தத்திற்கு பிறகு விவாகரத்து செய்தார். இந்த செய்தி தற்போது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவர் சோஹேல் கதுரியாவை விவாகரத்து செய்தார் நடிகை ஹன்சிகா மோத்வானி
சோஹேல் கதுரியா - நடிகை ஹன்சிகா மோத்வானிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Mar 2026 19:18 PM IST

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பின்பு நாயகியாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. கடந்த 2007-ம் ஆண்டு முதல் சினிமாவில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார் நடிகை ஹன்சிகா மோத்வானி (Actress Hansika Motwani). இவர் தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் அடுத்தடுத்துப் படங்களில் நடித்து பிசியான நடிகையாக வலம் வந்தார். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களின் நாயகியாக மாறினார் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழ் சினிமாவில் மட்டும் நடிகை ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான பலப் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை ஹன்சிகாவை தமிழ் சினிமா ரசிகர்கள் குட்டி குஷ்பு என்றும் செல்லமாக அழைப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வந்த நடிகை ஹன்சிகா மோத்வானி கடந்த 2022-ம் ஆண்டு சோஹேல் கதுரியா என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த சோஹேல் கதுரியா (Sohael Khaturiya) ஹன்சிகா மோத்வானியின் உயிர் தோழியின் முன்னாள் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைப்பெற்றது. இவர்களின் திருமணம் முடிந்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது விவாகரத்தில் முடிவடைந்துள்ளது.

கணவர் சோஹேல் கதுரியாவை விவாகரத்து செய்தார் நடிகை ஹன்சிகா மோத்வானி:

தொடர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்த ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேல் கதுரியா தம்பதி பிரிந்து வாழ்வதாக கடந்த 2025-ம் ஆண்டிலேயே செய்திகள் வெளியாகி வைரலானது. மேலும் நடிகை ஹன்சிகா மோத்வானி தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கி இருந்தார். இதன் காரணமாக அவர்கள் பிரிந்து இருந்தது உறுதியானது குறிப்பிடத்தக்கது.

Also Read… Arya 40: ஆர்யாவின் 40வது படத்தில் இணைந்த இரு நடிகைகள் – வைரலாகும் பதிவு!

இந்த நிலையில் இன்று மார்ச் மாதம் 11-ம் தேதி 2026-ம் ஆண்டு பாந்த்ரா குடும்பநல நீதிமன்றம் மும்பை ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேல் கதுரியா தம்பதிக்கு விவாகரத்து வழங்கி உத்தவரவிட்டுள்ளது. இந்த செய்தி தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… நான் அமைதியாக என் வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன் – வைரலாகும் ரவி மோகனின் இன்ஸ்டா பதிவு!

Follow Us