AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நான் அமைதியாக என் வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன் – வைரலாகும் ரவி மோகனின் இன்ஸ்டா பதிவு!

Ravi Mohans recent Instagram post: திரைத்துறையில் தொடர்ந்து சினிமா தொடர்பான செய்திகள் அதிக அளவில் வைரலாகி வருவதைவிட பிரபலங்களின் சொந்த வாழ்க்கை குறித்த செய்திகள் சமீபத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.

நான் அமைதியாக என் வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன் – வைரலாகும் ரவி மோகனின் இன்ஸ்டா பதிவு!
ரவி மோகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Mar 2026 10:44 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து நடிகர் ரவி மோகன் நடிப்பில் உருவாகி வரும் படங்கள், தயாரிப்பில் உருவாகி வரும் படங்கள், இயக்குநராக இயக்கி வரும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் நடிகர் ரவி மோகனின் படங்கள் தொடர்பான செய்திகள் மட்டும் இன்றி அவரது வாழ்க்கையில் நடைபெறும் விசயங்கள் குறித்த செய்திகளும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு நடிகர் ரவி மோகன் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி விவாகரத்து வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்த வழக்கு தொடர்பான செய்திகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் ரவி மோகன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நான் அமைதியாக என் வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்:

அந்தப் பதிவில் நடிகர் ரவி மோகன் கூறியுள்ளதாவது, நான் அமைதியாக என் வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். இதை மீண்டும் எழுத முடிவு செய்தேன்: நீங்கள் சொல்ல விரும்பும் அனைத்தையும் மீண்டும் சொல்லுங்கள், ஏனென்றால் பெண்கள் மட்டுமே சரியானவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆண்கள்தான் மிகப்பெரிய பாதிக்கப்பட்டவர்கள், நமது நீதித்துறை கூட அதைப் புரிந்துகொள்கிறது. ஒரு நாள் நீங்கள் அனைவரும் என் இதயத்தையும், நான் நேசிக்கும் மக்களுக்கு நான் என்ன செய்தேன் என்பதையும் அறிவீர்கள். தயவுசெய்து ஒரு பையனை வாழ விடுங்கள், உங்கள் அசிங்கமான எண்ணங்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். நான் என் பாதைக்குத் திரும்புகிறேன் என்று அந்தப் பதிவில் நடிகர் ரவி மோகன் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கானின் கதாப்பாத்திரம் இதுவா? வைரலாகும் தகவல்

நடிகர் ரவி மோகன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Ravi Mohan (@iam_ravimohan)

Also Read… நான் என் படத்திற்கு யூத் பெயர் வைக்க இதுதான் காரணம் – கென் கருணாஸ் விளக்கம்

Follow Us