AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டியூட் பார் 2 எப்போ வரும்? இயக்குநர் கீர்த்தீஸ்வரனின் கலகல ரிப்ளை

Director Keerthiswaran talks about Dede Part 2: தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் டியூட். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் சமீபத்தில் பேசியது வைரலாகி வருகின்றது.

டியூட் பார் 2 எப்போ வரும்? இயக்குநர் கீர்த்தீஸ்வரனின் கலகல ரிப்ளை
கீர்த்தீஸ்வரன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Mar 2026 11:19 AM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சுதா கொங்கரா. இவரிடம் உதவி இயக்குநராக தனது சினிமா பயணத்தை தொடங்கினார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். இந்த நிலையில் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி தமிழ் சினிமாவில் வெளியான டியூட் என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனார். ரொமாண்டிக் ஆக்‌ஷன் காமெடிப் படமாக உருவாகி இருந்த இந்த டியூட் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ இருவரும் அத்தை பையன் மாமா பொண்ணு என்ற கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து இருந்தனர். இதில் ஒருவர் மற்றொருவரை காதலிக்கும் போது ஒருத்தருக்கு காதல் எண்ணம் இருக்காது. இப்படி இருக்கும் சூழலில் எதிர்பாராத நேரத்தில் இவர்களுக்கு இடையே திருமணமும் நடந்து முடிந்துவிடுகிறது. ஆனால் மமிதாவிற்கோ அவரது காதலன் மூலமாக ஒரு குழந்தை பிறக்கிறது. இந்த பிரச்சனைகள் அனைத்தையும் பிரதீப் ரங்கநாதன் எப்படி சரிசெய்தார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரூபாய் 100 கோடிக்கு அதிகமாக வசூலித்து பிரதீப் ரங்கநாதனுக்கு ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

டியூட் முதல் பாகத்துக்கே பாடி தாங்கல:

இந்த நிலையில் சமீபத்தில் இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் பவழ மல்லி பாடலின் வெளியீட்டு விழாவில் டியூட் பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கலந்துகொண்டார். அப்போது மேடையில் அவர் பேசிக்கொண்டு இருக்கும் போது ரசிகர்கள் டியூட் 2 படம் எப்போ வரும் என்று கத்தினர். அதற்கு கீர்த்தீஸ்வரன் பார்ட் 2-வா ஒன்னு எடுக்குறதுக்கே பாடி தாங்கள என்று சிரித்துக்கொண்டே கூறினார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… டைம் லூப் டிடெக்டிக் த்ரில்லர் படத்தில் நடிக்கும் சந்தானம்… பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு!

இணையத்தில் வைரலாகும் கீர்த்தீஸ்வரன் பேச்சு:

Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் புருஷன் படத்தின் ஷூட்டிங்… BTS வீடியோவை வெளியிட்ட படக்குழு!

Follow Us