2026-ம் ஆண்டு வெளியாகும் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடிக்கும் படம் – அர்ச்சனா கல்பாத்தி
Producer Archana Kalpathi: கோலிவுட் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக வலம் வருகின்றது ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம். இந்த நிறுவனம் சார்பாக பல படங்கள் உருவாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அர்ச்சனா கல்பாத்தி பிரதீப் ரங்கநாதன் படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்ரது.
தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தும், வெளியிட்டும் ரசிகர்களிடையே பிரபலமான நிறுவனமாக இருக்கின்றது ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட். இந்த நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் படங்கள் தொடர்ந்து வசூலில் கெத்து காட்டி வருகின்றது. இறுதியாக இந்த தயாரிப்பு நிறுவனம் சார்பாக தமிழ் சினிமாவில் ட்ராகன் படம் வெளியானது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான இந்தப் படம் ரூபாய் 100 கோடிகளுக்கு அதிகமாக வசூலித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இந்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனி ஒருவன் மற்றும் எஸ்டிஆர் 51 ஆகியப் படங்களை தயாரிக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் எழுதி, இயக்கி நடிக்க உள்ள படத்தையும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இயக்குநராக அறிமுகம் ஆன பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநராக மட்டும் இன்றி தற்போது நாயகனாகவும் வலம் வருகிறார். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்தப் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்த 2025-ம் ஆண்டில் மட்டும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி ட்ராகன் மற்றும் டியூட் என இரண்டு படங்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.




2026-ம் ஆண்டு வெளியாகும் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடிக்கும் படம்:
இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அளித்தப் பேட்டி ஒன்றில் பேசியதாவது, பிரதீப் ரங்கநாதன் தனது அடுத்த படத்தில் தானே நடித்து இயக்கப் போகிறார். நாங்கள் அந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கிறோம். இது ஒரு மிகவும் சுவாரஸ்யமான திரைப்படம். இந்தப் படத்தை 2026-ல் படப்பிடிப்பு நடத்தி வெளியிட நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று அர்ச்சனா கல்பாத்தி பேசியுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… 19 ஆண்டுகளை நிறைவு செய்தது தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படம்!
அர்ச்சனா கல்பாத்தி சொன்ன விசயம்:
“#PradeepRanganathan is going to Act & Direct himself for the next movie🎬🌟. We are producing it under AGS. It’s a very exciting film🤩. We are planning to shoot & release the film in 2026🔥”
– #Archanakalpathi pic.twitter.com/qDvxMGInOP— AmuthaBharathi (@CinemaWithAB) December 16, 2025
Also Read… Jana Nayagan: தளபதி ரசிகர்களே தயாரா? அனைவரும் எதிர்பார்த்த ஜன நாயகன் அப்டேட் இதோ!