Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

லேப்டாப்பில் இருக்கும் இந்த கீ பல வேலைகளை செய்யும்.. பலருக்கும் தெரியாத விஷயம்!

This One Button In Your Laptop Do More Works | லேப்டாப்பின் கீ பேடில் உள்ள ஒவ்வொரு கீயும் பல வேகைகளை செய்யும். அந்த வகையில் லேப்டாப்பின் கீ பேடில் உள்ள Fn கீ எதற்காக பயன்படுத்தப்படுகிறது, அதன் பயன்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

லேப்டாப்பில் இருக்கும் இந்த கீ பல வேலைகளை செய்யும்.. பலருக்கும் தெரியாத விஷயம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 04 Feb 2026 17:38 PM IST

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், மனிதர்களின் வாழ்வில் இருந்து சில கேட்ஜெட்டுகள் பிரிக்க முடியாதவையாக மாறிவிடுகின்றன. அத்தகைய கேட்ஜெட்டில் ஒன்றுதான் லேப்டாப் (Laptop). பலரும் லேப்டாப்பை தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால், பலருக்கும் லேப்டாப்பில் உள்ள கீகள் எதற்காக பயன்படும் என்பது குறித்து தெரிவதில்லை. சிலர் அந்த கீகள் எதற்காக உள்ளன என்பதை கூட தெரியாமல் லேப்டாப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பல வேலைகளை செய்ய கூடிய இந்த ஒரு கீ குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

பல வேலைகளை செய்ய கூடிய லேப்டாப்பின் மிக முக்கிய கீ

லேப்டாப்பில் எண்கள், எழுத்துக்கள் மற்றும் குறியீடுகளை தவிற ctrl, fn, alt, caps lock உள்ளிட்ட மேலும் பல கீகள் இருக்கும். அவற்றின் பயன் என்பது பலருக்கும் தெரியாது. அந்த வகையில், பெரும்பாலான மக்களுக்கு பயன்படுத்த தெரியாத ஒரு கீ தான் fn. fn என்பதற்கு Function என்று அர்த்தம். இந்த கீயை மற்ற சில கீகளுடன் இணைந்து பயன்படுத்தும் போது பல்வேறு வேலைகளை மிக சுலபமாகவும், எளிதாகவும் செய்து முடிக்க முடியும்.

இதையும் படிங்க : 10,000 mAh பேட்டரி.. அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான ரியல்மி பி4 பவர்!

1. ப்ரொஜெக்டர் செட்டிங்க்ஸ் மாற்ற

நீங்கள் லேப்டாப்பில் உள்ள Fn + F7 பட்டன்களை அழுத்தினால் திரை ப்ரொஜெக்டர் செட்டிங்க்ஸ் திறக்கும். இதன் மூலம் திரையை லேப்டாப்பில் இருந்து ப்ரொஜெக்டருக்கோ அல்லது மற்றொரு மானிட்டருக்கோ மாற்றுவது சுலபமாக இருக்கும்.

2. மவுஸ் இல்லாமல் ஸ்க்ரோலிங்

சில சமயங்களில் மவுஸ் வேலை செய்யாமல் போகலாம் அல்லது நீங்கள் மவுஸை வீட்டில் மறந்து வைத்துவிடலாம். அத்தகைய சூழலில் நீங்கள் இந்த Fn கீயை பயன்படுத்தலாம். அதாவது Fn கீ உடன் Up மற்றும் Down Arrow-வை நீங்கள் பயன்படுத்தும்போது உங்களது திரை வேகமாக நகரும்.

இதையும் படிங்க : கூகுள் குரோமை பயன்படுத்த வேண்டாம்.. பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஆப்பிள்!

எண்கள்

சிறிய லேப்டாப்களில் Numeric Pad இருக்காது. அத்தகைய சூழலில் நீங்கள் Fn + Num Lock அழுத்தினால் உங்கள் கீபோர்டில் உள்ள சில எழுத்துக்கள் எண்களாக மாறிவிடும். இது கணக்கு வழக்குகளை மிக வேகமாக முடிக்க உதவியாக இருக்கும்.