AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இனி டிவியிலும் இன்ஸ்டாகிராம்.. விரைவில் வருகிறது அசத்தல் அம்சம்.. மெட்டா முக்கிய அறிவிப்பு!

Instagram Reels on TV | மெட்டாவின் இன்ஸ்டாகிராம் செயலிக்கு ஏராளமான பயனர்கள் உள்ளனர். இதன் காரணமாக, மெட்டா பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான், தற்போது இன்ஸ்டாகிராமை டிவியில் பயன்படுத்தும் அம்சம் குறித்து அறிவித்துள்ளது.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 Nov 2026 22:40 PM IST
உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் முக்கிய பொழுதுபோக்கு செயலியாக இன்ஸ்டாகிராம் உள்ளது. சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை என பலரும் இன்ஸ்டகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். எனவே தான் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த மெட்டா புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.

1 / 5
அந்த வகையில் தான், தற்போது ஒரு முக்கியமான அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான பணியில் இறங்கியுள்ளது. அதாவது, இன்ஸ்டாகிராம் செயலியில் பெரும்பாலான பயனர்கள் விரும்பி பார்ப்பது ரீல்ஸ் தான். எனவே, தொலைக்காட்சியில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸை கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது.

2 / 5
இதன் மூலம் பயனர்களால் இனி தங்களது நண்பர்கள், குடும்பத்தினர் உடன் இணைந்து தொலைக்காட்சியில் ரீல்ஸ் பார்க்க முடியும். இந்த அம்சம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மெட்டா அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு பிடித்த நபர்களின் வீடியோக்கள், Vlog ஆகியவற்றை டிவியில் பார்க்க முடியும்.

3 / 5
இதுவரை யூடியூப் மட்டுமே இந்த அம்சத்தை வழங்கி வந்தது. அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமும் இந்த களத்தில் இறங்கியுள்ளது. இந்த முயற்சியின் மூலம் சமூக ஊடகங்கள் இனி அனைவரது தொலைக்காட்சிகளிலும் வர உள்ளது. அதாவது, பயனர்கள் தங்களது தொலைக்காட்சி மூலம் இன்ஸ்டா ரீல்ஸ், ஸ்டோரி ஆகியவற்றை பார்க்க முடியும்.

4 / 5
தொலைக்காட்சி மூலம் சிறிய வீடியோக்களை பார்த்து அந்த மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்வதற்காக தான் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மெட்டா கூறியுள்ளது. நவம்பர் 27, 2027 அன்று மும்பையில் நடைபெற்ற மெட்டாவின் ஆண்டு கிரியேட்டர் விழாவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

5 / 5
Follow Us