Sai Pallavi: கிளாமருக்கு முக்கியத்துவம் தரும் வேடம் வேண்டாம் – சாய் பல்லவி பேச்சு!
Sai Pallavis Bold Choice: பான் இந்திய சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவரும் கதாநாயகியாக இருந்துவருபவர் சாய் பல்லவி. இவரின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் மூன்று படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. சமீபத்தி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கிளாமர் கதாபாத்திரங்கள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகியாக இருந்துவருகிறார். மலையாள சினிமாவின் மூலம் சினிமாவில் நாயகியாக நுழைந்த இவர், தற்போது பான் இந்திய கதாநாயகியாக இருந்துவருகிறார். இந்த 2026ம் ஆண்டிலே இவரின் நடிப்பில் இரு இந்தி திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. அந்த வரிசையில் இறுதியாக இவரின் நடிப்பில் சினிமாவில் வெளியான திரைப்படம்தான் ஓ.எம் (OM Movie). இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periasamy) இயக்கத்தில், தனுஷ் நாயகனாக இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படமானது கடந்த 2026ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதியில் வெளியான நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றது. இதில் சாய் பல்லவி, “நித்யா ரெட்டி” என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகும் பேக் டூ பேக் புதிய திரைப்படங்களில் கதாநாயகியாக இவர் நடித்துவருகிறார்.
தெலுங்கில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் கல்கி படத்தில் தீபிகா படுகோன் நடித்த சுமதி வேடத்தில் சாய் பல்லவிதான் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலிம் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சாய் பல்லவி, கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்காத காரணம் பற்றி பேசியுள்ளார்.




இதையும் படிங்க: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அடுத்தப் படம் எதன் அடிப்படையில் இருக்கும்? வைரலாகு தகவல்
கவர்ச்சியான வேடத்தில் நடிக்காதது குறித்து சாய் பல்லவி பகிர்ந்த விஷயம்:
அந்த பேட்டியில் பேசிய சாய் பல்லவி, “சினிமாவில் உள்ள படங்களில் கவர்ச்சிக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க நான் விரும்பவில்லை. ஒரு கதாபாத்திரம் அதற்கான தனித்துவமும், அது அந்த படத்தின் கதைக்கு அளிக்கும் தனித்துவம்தான் எனக்கு முக்கியம். அர்த்தமுள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்வதற்காக, எனது திரைப்பயணத்தில் சுமார் 4 முதல் 5 ஆண்டுகள் வரையில் பொறுமையாக காத்திருக்கிறேன்” என அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
நடிகை சாய் பல்லவியின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகை சாய் பல்லவியில் நடிப்பில் இறுதியில் ஓ.எம் திரைப்படம் வெளியானது. இதன் பிறகு இவர் மணிரத்தினம் இயக்கத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இஞ்சி வெல்லம் என்ற திரைப்படத்தில் நடித்துவந்தார்.
இதையும் படிங்க: மணிரத்னத்தின் இஞ்சி வெல்லம் படத்தின் கதை இதுதானா? வைரலாகும் தகவல்
இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், 2027ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதியில் உலகமெங்கும் இப்படம் வெளியாகிறது. இந்த படத்திற்கு பிறகு தற்போது அவர், கல்கி 2 படத்தில் பிசியாக இருப்பதாகவும், இந்தியில் புதிய படம் ஒன்றில் நடித்துவருவதாகவும் கூறப்படுகிறது.