AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

லக்ஷ்மி பிரியா – தன்யா பிரச்சனை.. லக்ஷ்மி பிரியாவை கேள்விகளால் பெண்டு நிமித்திய விஜய் சேதுபதி!

Lakshmi Priya-Dhanya Conflict: நடிகர் விஜய் சேதுபதி, சின்னத்திரையில் தொகுப்பாளராக தொகுத்துவரும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 10.இந்த நிகழ்ச்சியானது 12வது வாரத்தின் இறுதியில் உள்ள நிலையில், இன்று (28/11/2026) போட்டியாளர்களை விஜய் சேதுபதி சந்தித்துள்ளார். இந்நிலையில், லக்ஷ்மி பிரியாவிடம், தன்யாவுடன் நடந்த சண்டை குறித்து கேள்விகளை கேட்டுள்ளார்.

லக்ஷ்மி பிரியா – தன்யா பிரச்சனை.. லக்ஷ்மி பிரியாவை கேள்விகளால் பெண்டு நிமித்திய விஜய் சேதுபதி!
பிக் பாஸ் சீசன் 10 ப்ரோமோImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 28 Nov 2026 18:37 PM IST

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பார்க்கப்பட்டுவரும் தொலைக்காட்சியாக இருந்துவருவது விஜய் டிவி (Vijay TV). இந்த தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 100 நாட்களுக்கும் மேல் நடத்தப்பட்டுவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவதுதான் பிக் பாஸ். இந்த 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது தொடங்கிய நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. கடந்த 2026 செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியானது கிட்டத்தட்ட 12 வாரத்தை கடந்துள்ளது. கிட்டத்தட்ட 83 நாட்களை கடந்த இந்த நிகழ்ச்சியானது இன்னும் சில நாட்களுக்குள் முழுமையாக நிறைவடைகிறது.

சின்னத்திரை மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சியானது சிறப்பாக வரவேற்கப்பட்டுவரும் நிலையில், இன்று வார இறுதி என்ற நிலையில் போட்டியாளர்களை விஜய் சேதுபதி சந்தித்துள்ளார். நேற்று (27/11/2026) கிச்சனில் லக்ஷ்மி பிரியா மற்றும் தன்யா இடையே பிரச்சனை வெடித்த நிலையில், அது குறித்து லக்ஷ்மி பிரியாவிடம் அடுக்கடுக்கான கேள்விகளை விஜய் சேதுபதி கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஸாம்பீ பராக்… சந்தானத்தின் லவ் பைட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

லக்ஷ்மி பிரியாவிடம் கேள்விகளை அடுக்கிய விஜய் சேதுபதி:

இந்த ப்ரோமோவில் விஜய் சேதுபதி பேசுகையில், “லக்ஷ்மி பிரியா சொல்லுங்க, உங்களுக்கும் தன்யாவுக்கும் என்ன நடந்தது என கேட்டார். உடனே லக்ஷ்மி பிரியா, தன்யா என்னிடம் நான் ரொம்ப நேரமாக நின்றுகொண்டு இருக்கிறேன்.. கல்லு காலியாகத்தான இருக்கிறது தோசை ஊற்று என கூறினார். நான் உடனே, “எப்போது எனக்கு ஊற்றவேண்டும் என தெரியும்.. நீங்க சொல்லி தராதீங்க” என கூறினேன் சார் என சொன்னார். உடனே விஜய் சேதுபதி, “ஒருத்தர் பசிக்கிறது என கேட்கும்போது, அப்போ கிச்சன் டீம் என் இஷ்டத்துக்கு ஊற்றுவேன் என சொல்லக்கூடாதுல என கூறினார்.

இதையும் படிங்க: பிக்பாஸில் யார் வீட்டார் உள்ளே வரும்போது பயந்தீர்கள்… போட்டியாளர்கள் ஓபன் டாக்!

அதன் பிறகு பேசிய லக்ஷ்மி பிரியா, பசி என்பதை தாண்டி, அவங்க டிக்கெரிங்காக பேசினாங்க சார் என சொன்னார். உடன் விஜய் சேதுபதி, “தன்யா இடத்தில் லக்ஷ்மி பிரியா.. லக்ஷ்மி பிரியா இடத்தில தன்யா இருந்தாலும் இதுபோல சொல்ல கூடாதுல. உங்க இடத்தில் தன்யா இருந்தாலும், தோசை ஊற்றுங்க என சொல்லும் இடத்தில நியாயம் இருக்கிறதே. இதே இடத்தில வினோத் பாபு – ப்ரித்விக்கு நட்பாக தோசை ஊத்துறீங்க.. அதற்கு முன் கேட்ட தன்யாவுக்கு மாட்டேன்னு சொல்றீங்க. நீங்கள் ஒருஒருவருக்கும் ஒவ்வொரு ஆளாக இருக்கிறீர்கள் என நான் கூறவா?” என அதில் பேசியிருந்தார்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 83வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த பதிவு:

இந்த வாரம் முழுக்க பேமிலி வீக்காக இருந்த நிலையில், பெரிதாக சண்டைகள் எதுவும் இல்லை. மேலும் இன்னும் சில வாரங்களில் இந்த நிகழ்ச்சியானது நிறைவடைய உள்ள நிலையில், பழைய போட்டியாளர்கள் மீண்டும் இந்த நிகழ்ச்சிக்கும் நுழைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us