AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் யார் வீட்டார் உள்ளே வரும்போது பயந்தீர்கள்… போட்டியாளர்கள் ஓபன் டாக்!

Bigg Boss Tamil Season 10 | தமிழ் சின்னத்திரையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃபேமிலி வாரம் நடைப்பெற்றது. இந்த வாரம் எந்த குடும்பத்தார் வரும் போது பயந்ததாக மற்ற போட்டியாளர்கள் வெளிப்படையாக தெரிவித்து வைரலாகி வருகின்றது.

பிக்பாஸில் யார் வீட்டார் உள்ளே வரும்போது பயந்தீர்கள்… போட்டியாளர்கள் ஓபன் டாக்!
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Nov 2026 16:14 PM IST

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்களை தமிழக மக்கள் கொண்டாடி வருவது போல இவர் தொகுத்து வழங்கும் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியையும் மக்கள் வரவேற்று வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே மிகவும் விறுவிறுப்பாக சென்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி தொடங்கி தொடர்ந்து 82 நாட்கள் இதுவரை முடிவடைந்து தற்போது 83-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த 12-வது வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் ஃபேமிலி வாரமாக கொண்டாடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வீட்டில் உள்ள 8 போட்டியாளர்களின் குடும்பத்தினரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு குடும்பத்தினர் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிறகு வீட்டில் உள்ள போட்டியாளர்களின் போட்டியும் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிகழ்வு குறித்து இன்று பேசும் விஜய் சேதுபதி எந்த போட்டியாளரின் குடும்பம் வரும்போது நீங்க பயந்தீர்கள் என்று போட்டியாளர்களிடையே விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார்.

பிக்பாஸில் யார் வீட்டார் உள்ளே வரும்போது பயந்தீர்கள்:

அதற்கு பதிலளித்த பிக்பாஸ் தமிழ் சிசன் 10 போட்டியாளர்களில் லக்‌ஷ்மி பிரியா பேசும் போது முனியம்மாவின் கணவர் வரும் போது அவரைப் பார்த்து பயந்ததாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அடுத்து பேசிய வினோத் பாபு ஜேசனின் மனைவி தன்னிடம் எதாவது கேட்டுவிடுவார் என்று தோன்றியதாக கூறினார். அதனைத் தொடர்ந்து பேசிய ஜேசன் இந்த வீட்டில் வந்த மற்ற போட்டியாளர்களின் குடும்பத்தினர் தன்னிடம் நடந்துகொண்ட விதம் தன்னை மிகவும் சாந்தமானவராக மாற்றியதாக தெரிவித்து இருந்தார். இது தொடர்பான புரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… விஜய் சேதுபதியின் ட்ரெயின் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? வெளியான அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட புரோமோ வீடியோ:

Also Read… Laila: சூர்யா – ஜோதிகா காதல் அப்போவே எனக்கு தெரியும் – லைலா பகிர்ந்த விஷயம்!

Follow Us