AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IPL 2027: KKR-ன் மாஸ்டர் பிளான்.. கொல்கத்தாவில் சிறப்பு சோதனை போட்டி.. உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு?

KKR's Bold Strategy: ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிறப்புத் திட்டம் வகுத்துள்ளது. கொல்கத்தாவை புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு மத்தியில், KKR அணி முதல் முறையாக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் வீரர் தேர்வுக்கான சோதனைப் போட்டிகளை நடத்துகிறது. புதிய திறமைகளை கண்டறிவதும், உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதும் இதன் நோக்கம்.

IPL 2027: KKR-ன் மாஸ்டர் பிளான்.. கொல்கத்தாவில் சிறப்பு சோதனை போட்டி.. உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 28 Nov 2026 17:41 PM IST

ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற அணிகளில் ஒன்றான கொல்கத்தா அணி, ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு (IPL 2027) முன்பாக சிறப்பு திட்டத்தை வகுத்துள்ளது. பொதுவாகவே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (Kolkata Knight Riders) கொல்கத்தா நகரை புறக்கணிப்பதாக எப்போதும் குற்றம் சாட்டப்படுகிறது. கேகேஆர் அணி பெங்காலி கிரிக்கெட் வீரர்கள் மீது ஆர்வம் காட்டுவதில்லை என்று பலர் புகார் எழுகிறது. இதுமட்டுமின்றி கேகேஆரின் அகாடமியும் மும்பையில்தான் உள்ளது. ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என்ற பெயரை தவிர, அணிக்கு இந்த நகரத்திற்கும் வேறு எந்தத் தொடர்பும் இல்லை.

ALSO READ: தல ஃபார் எ ரீசன்.. ரசிகர்களின் ட்ரெண்ட் குறித்து பேசிய எம்.எஸ்.தோனி!

இருப்பினும், இந்த முறை ஷாருக் கானின் அணி ஒரு வழக்கத்திற்கு மாறான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. கொல்கத்தாவில் நடைபெறும் ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாகவே வீரர்களைத் தேர்வு செய்யும் பணியை கொல்கத்தா அணி நடத்த விரும்பகிறது. அதன்படி, வருகின்ற 2026 டிசம்பர் 4ம் தேதி முதல் ஈடன் கார்டன்ஸில் கேகேஆரின் பயிற்சி முகாம் நடைபெறும். ஏலத்தில் எந்தெந்த கிரிக்கெட் வீரர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதைப் பார்ப்பதற்காக அங்கு சோதனைப் போட்டிகள் நடத்தப்படும்.

கேகேஆர் வட்டாரங்களின்படி,2026 டிசம்பர் 4 முதல் 7 வரை மொத்தம் 4 நாட்களுக்கு ஈடன் கார்டன்ஸ் மைதானத்தைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு சிஏபி-யிடம் (CAB) கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் அங்கு சோதனைப் போட்டிகளை நடத்தி, சில புதிய முகங்களைச் சோதித்துப் பார்க்க விரும்புகிறார்கள். மேலும், தற்போது எந்த அணியுடனும் ஒப்பந்தத்தில் இல்லாத, நன்கு அறியப்பட்ட கிரிக்கெட் வீரர்களும் அழைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கத்தை சேர்ந்த பல கிரிக்கெட் வீரர்களும் சோதனைப் போட்டிகளில் விளையாட அழைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. உள்ளூர் கிரிக்கெட்டில் மேற்கு வங்க அணிக்காக விளையாடிய ஆகாஷ் தீப்பை, கடந்த முறை ஏலத்தில் கேகேஆர் அணி வாங்கியது. ஆனால், அவர் தக்கவைக்கப்படவில்லை. இந்த முறை கேகேஆரின் தேர்வுப் பட்டியலில் மேற்கு வங்கத்தை சேர்ந்த எந்த கிரிக்கெட் வீரருக்காவது வாய்ப்பு கிடைக்குமா என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

கிடைத்த தகவல்களின்படி, கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர், வழிகாட்டி டுவைன் பிராவோ, உதவிப் பயிற்சியாளர் ஆண்ட்ரே ரஸ்ஸல் , ஷேன் வாட்சன் ஆகியோர் இந்த 4 நாள் தேர்வு முகாமில் கலந்துகொள்ளக்கூடும். வெளிநாட்டுப் பயிற்சியாளர்களும் துணைப் பணியாளர்களும் வருகின்ற 2026 டிசம்பர் 16ம் தேதி நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்காக ஏற்கனவே இந்தியா வரத் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் ஒரு வாரம் முன்னதாகவே வந்து, கிரிக்கெட் வீரர்களைத் தங்கள் கண்களால் பார்க்கலாம். ரிங்கு சிங் போன்ற மூத்த வீரர்களும் கலந்துகொள்ளக்கூடும்.

ALSO READ: கேஆருக்கு கேப்டன் யார்..? ரிங்கு சிங் தலைமை பொறுப்பு ஏற்பாரா?

கேகேஆர் அணியின் அடுத்த கேப்டன் யார்..?

கேகேஆர் அணியின் அடுத்த கேப்டன் யார் என்பதில் மிகுந்த ஆர்வம் நிலவுகிறது. அஜிங்க்யா ரஹானே ஓய்வு பெற்றுவிட்டார். கேகேஆர் அணியும் அவரைத் தக்கவைத்துக் கொள்ளவில்லை. சிலரின் கருத்துப்படி, கடந்த சீசனில் கேகேஆர் அணியின் துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்ட ரிங்கு சிங்கிடம் முழுப் பொறுப்பும் ஒப்படைக்கப்படலாம். ரிங்குவுக்கு அணியின் அனைத்து நுணுக்கங்களும் தெரியும். அவர் கேகேஆர் அணியின் உள்வட்டத்தைச் சேர்ந்தவர். மறுபுறம், ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப்பை வாங்குவதன் மூலம், கேகேஆர் அணி அவருக்கு முக்கியமான தலைமைப் பொறுப்பையும் வழங்கக்கூடும் என்று சிலர் கருதுகின்றனர். அனைத்து வடிவமைப்புகளும் கொல்கத்தாவின் மையப்பகுதியிலிருந்தே ஏற்பாடு செய்யப்படும்.

Follow Us