AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IPL 2027: ஐபிஎல் 2027 உறுதி செய்யப்பட்ட கேப்டன்கள் பட்டியல்.. யார் வழிநடத்துகிறார்கள்..?

IPL 2027 Captains List: ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன்னதாக, அணிகள் தங்களது கேப்டன் பட்டியலை வெளியிட்டுள்ளன. ரோஹித் சர்மா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக உறுதி செய்யப்பட்டுள்ளார். ரஜத் படிதார் (RCB), ருதுராஜ் கெய்க்வாட் (CSK), சுப்மன் கில் (GT) உட்பட 7 அணிகளின் கேப்டன்கள் உறுதியாகியுள்ளனர். டெல்லி, கொல்கத்தா, லக்னோ ஆகிய 3 அணிகளின் கேப்டன் நிலை இன்னும் தெளிவாகவில்லை.

IPL 2027: ஐபிஎல் 2027 உறுதி செய்யப்பட்ட கேப்டன்கள் பட்டியல்.. யார் வழிநடத்துகிறார்கள்..?
ரஜத் படிதார் - ஷ்ரேயாஸ் ஐயர் - ருதுராஜ் கெய்க்வாட்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Nov 2026 08:00 AM IST

ஐபிஎல் 2027-க்கான (IPL 2027) மினி ஏலம் வருகின்ற 2026 டிசம்பர் மாதம் 16ம் தேதி கோவாவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, 10 அணிகளும் தங்களது தக்கவைக்கப்பட்ட கேப்டன் பட்டியலை வெளியிட்டுள்ளன. 7 அணிகளின் கேப்டன்கள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் உட்பட 3 அணிகளின் கேப்டன்களின் நிலை தெளிவாக இல்லை. கடந்த 2026 ஐபிஎல் சீசனில் டெல்லி அணியை வழிநடத்திய அக்சர் படேல் தக்கவைக்கப்பட்டுள்ளார். ஆனால் ரிஷப் பண்ட்டின் வருகை யார் கேப்டனாக இருப்பார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அதேநேரத்தில், நேற்று அதாவது 2026 நவம்பர் 27ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் ரோஹித் சர்மாவை (Rohit Sharma) தங்களது கேப்டனாக அறிவித்தது. இந்தநிலையில், ஐபிஎல் 2027ல் உறுதி செய்யப்பட்டுள்ள கேப்டன்கள் விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: மீண்டும் கேப்டன் ரோஹித் சர்மா.. மும்பை இந்தியன்ஸ் அறிவிப்பு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

ரஜத் படிதாரின் தலைமையின் கீழ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 18 ஆண்டுகளில் தனது முதல் பட்டத்தை வென்றது. ரஜத் படிதார் 2025-லும், மீண்டும் 2026-லும் ஆர்சிபி அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். எனவே, ஐபிஎல் 2027லிலும் ரஜத் படிதார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக தொடர்வார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

எம்.எஸ். தோனி தற்போது ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தோனியின் பதவிக்காலத்தில் நியமிக்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக உள்ளார். சஞ்சு சாம்சனின் வருகை, கெய்க்வாடை கேப்டன் பதவியிலிருந்து நீக்கலாமா என்ற விவாதத்தைத் தூண்டியது, ஆனால் கடந்த 2026ம் ஆண்டும் சஞ்சு சாம்சன், கெய்க்வாடின் கேப்டன்ஷியில் விளையாடினார். எனவே, வருகின்ற ஐபிஎல் 2027லிலும் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் டைட்டன்ஸ்:

ஹர்திக் பாண்ட்யா கடந்த ஐபிஎல் 2023 சீசனுக்கு பிறகு விலகியதால் குஜராத் டைட்டன்ஸ் அணி சுப்மன் கில்லை கேப்டனாக நியமித்தது. அதன் பிறகு கில், இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரை நீக்குவதற்கு எந்தக் காரணமும் இல்லை. ஐபிஎல் 2027-லும் கில் குஜராத் அணியின் கேப்டனாகத் தொடர்வார்.

பஞ்சாப் கிங்ஸ்:

ஹர்திக் பாண்ட்யா ட்ரேடு மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார். இதனால், ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக இருப்பாரா என்ற கேள்விகள் எழுந்தன. இருப்பினும், ஷ்ரேயாஸ் ஐயரே கேப்டனாகத் தொடர்வார் என்று பாண்ட்யாவே தெளிவுபடுத்தினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

கடந்த ஐபிஎல் 2026 சீசனில் சஞ்சு சாம்சன் விலகிய பிறகு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரியான் பராக்கை முழுநேர கேப்டனாக நியமித்தது. பராக் ஒரு இளம் வீரர் என்பதாலும், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பராக் கேப்டனாகத் தொடர்வார் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஐபிஎல் 2027 தொடரில் பாதி சீசனுக்கு விளையாடுவதாக இருந்தாலும், அதற்காக இந்தியாவுக்குப் பயணம் செய்வதை பேட் கம்மின்ஸ் உறுதி செய்துள்ளார். இந்த நிலையில், அவர் கேப்டனாகத் தொடர்வார். ஆனால், பாட் கம்மின்ஸ் இல்லாத சமயத்தில் இஷான் கிஷன் பொறுப்பேற்கக்கூடும்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்:

கடந்த ஐபிஎல் 2026ம் ஆண்டு அக்சர் படேல் அணிக்குத் தலைமை தாங்கினார். ஆனால் தற்போது அவர்களின் முன்னாள் கேப்டன் ரிஷப் பந்த் பரிமாற்றத்தின் மூலம் அணிக்குத் திரும்பியுள்ளார். பயிற்சி ஊழியர்களிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சௌரவ் கங்குலி தலைமைப் பயிற்சியாளராகவும், யுவராஜ் சிங் பேட்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டெல்லி அணியின் கேப்டனின் நிலை தெளிவாக இல்லை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஐபிஎல் 2026 சீசனில் அஜிங்க்யா ரஹானே கேகேஆர் அணிக்குத் தலைமை தாங்கினார். அதன்பின் ரஹானே ஓய்வு பெற்றுவிட்டார். கேகேஆர் அணி இன்னும் புதிய கேப்டனை அறிவிக்கவில்லை. ரிங்கு சிங் ஒரு வலுவான போட்டியாளராக பார்க்கப்படுகிறார்.

ALSO READ: இந்திய அணிக்காக விளையாடிய 7 வீரர்கள்.. அன்கேப்டு வீரர்களா? ஐபிஎல்லில் இப்படி ஒரு விதியா?

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

ரிஷப் பண்ட் விலகிய பிறகு, லக்னோ அணியும் தனது புதிய கேப்டனின் பெயரை இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், நிக்கோலஸ் பூரன் கேப்டனாக நியமிக்கபடலாம் என்று தெரிகிறது.

Follow Us