AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IPL 2027: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் இவர்தான்.. வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

Mumbai Indians Captain: மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2027 தொடருக்கான புதிய கேப்டனை நாளை (நவம்பர் 27) அறிவிக்க உள்ளது. ரோஹித் சர்மாவின் ஜெர்சி எண் (45), 5 முறை சாம்பியன் பட்டங்கள் ஆகிய குறிப்புகள் அவர் மீண்டும் கேப்டனாகத் திரும்புவார் என்பதையே உணர்த்துகின்றன. ஹர்திக் பாண்ட்யா விலகிய நிலையில், ரசிகர்கள் ரோஹித் சர்மா மீண்டும் தலைமை தாங்க வேண்டும் என பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

IPL 2027: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் இவர்தான்.. வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
மும்பை இந்தியன்ஸ் கேப்டன்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 26 Nov 2026 21:13 PM IST

ஐபிஎல் 2027 தொடருக்கான (IPL 2027) தனது புதிய கேப்டனை மும்பை இந்தியன்ஸ் அணி, நாளை அதாவது 2026 நவம்பர் 27ம் தேதி அறிவிக்கவுள்ளது. அதில், ரோஹித் சர்மா மீண்டும் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்துவார் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தும் வகையில், மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) ஒரு பதிவின் மூலம் இதை உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக, மும்பை இந்திய அணி நேற்று அதாவது 2026 நவம்பர் 25ம் தேதி வெளியிட்ட ஒரு புகைப்படமும், ரோஹித் சர்மா மீண்டும் மும்பை அணிக்குத் தலைமை தாங்குவார் என்று ரசிகர்கள் நம்புவதற்கு வழிவகுத்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி 2026 நவம்பர் 26ம் தேதியான இன்று மாலை சரியாக 5:45 மணிக்கு, இன்னும் 24 மணி நேரத்தில் ஓர் அறிவிப்பு வெளியிடப்படும் என்று பதிவிட்டுள்ளது. இது கேப்டன் பதவி தொடர்பானது, அதாவது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனை 2026 நவம்பர் 27ம் தேதியான நாளை மாலை 5:45 மணிக்கு அறிவிக்க இருக்கிறது. இந்தப் பதிவின் நேரம் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இந்த பதிவின் அனைத்து புகைப்படங்களும் ரோஹித் சர்மா தொடர்புடையதாகவே உள்ளது.

ALSO READ: ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனா? MI பதிவு கிளப்பிய பரபரப்பு!

5 முறை சாம்பியன்.. 45ம் ஜெர்சி நம்பர்..

ரோஹித் சர்மாவின் ஜெர்சி எண் 45 என்பதால், இது அவராக தான் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இது மட்டுமின்றி, ரோஹித் சர்மாவின் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. “5:45” என்ற எண்ணை, ரோஹித் சர்மா புதிய கேப்டனாக இருப்பார் என்று ரசிகர்கள் பொருள் கொள்கின்றனர்.

கேப்டன்ஷி மாற்றங்கள்:

ரோஹித் சர்மாவின் தலைமையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது. அவர்கள் 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் பட்டத்தை வென்றனர். ஐபிஎல் 2024-க்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பதவியில் மாற்றம் செய்து, ரோஹித்துக்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யாவை நியமித்தது. இருப்பினும், இந்த முடிவால் ரசிகர்கள் கடும் கோபமடைந்தனர். மேலும் இதன் காரணமாக ஹர்திக் பாண்ட்யா களத்தில் மீண்டும் மீண்டும் கேலி செய்யப்பட்டார்.

ALSO READ: இந்திய அணிக்காக விளையாடிய 7 வீரர்கள்.. அன்கேப்டு வீரர்களா? ஐபிஎல்லில் இப்படி ஒரு விதியா?

ஐபிஎல் 2027-க்கு முன்பு, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அணியிலிருந்து விலகினார். ஹர்திக் பாண்ட்யா பரிமாற்றத்தின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்ட்யாவுக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்ட்யா தலைமையின் கீழ், மும்பை இந்தியன்ஸ் அணி 2024 முதல் 2026 வரை தொடர்ச்சியாக மூன்று ஐபிஎல் சீசன்களில் விளையாடியது. அதில், மும்பை அணி 44 போட்டிகளில் 17-ல் வெற்றி பெற்று 27-ல் தோல்வியடைந்தது. கடந்த 3 சீசன்களில் மும்பை அணியால் ஒருமுறை கூட இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியவில்லை.

Follow Us