விரைவில் இடைத்தேர்தல்? 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை கோரிய வழக்கு: நாளை வெளியாகிறது தீர்ப்பு
Five Constituencies By-Election Case : தமிழ்நாட்டில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் (By Election) நடத்த தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் 27, 2026 நாளை காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கவுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, நவம்பர் 26 : தமிழ்நாட்டில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் (By Election) நடத்த தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் 27, 2026 நாளை காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கவுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்ல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஒருவேளை தடை விதிக்கப்படவில்லை என்றால் விரைவில் 5 தொகுதிகளுக்கன இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை கோரிய வழக்கு
கடந்த 2026 ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களில் தவெக வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளுடன் ஆட்சியமைத்தது. தேர்தலில் தவெக 108 இடங்களையும், திமுக 73 இடங்களையும், அதிமுக 53 இடங்களையும் கைப்பற்றின. இதனையடுத்து காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவற்றின் ஆதரவுடன் முதல்வராக விஜய் பொறுப்பேற்றார்.
இதையும் படிக்க : நிலத்தை அளக்க லஞ்சம்! கூகுள் பே-வில் விழுந்த ரூ. 25 ஆயிரம்.. கோவையில் சிக்கிய நில அளவையர்!




தமிழக முதல்வர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக, திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல அதிமுக சார்பில் வெற்றிபெற்ற மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
இதில் மதுராந்தகம், பெருந்துறை ஆகிய 2 தொகுதிகளை தவிர்த்து, மற்ற தொகுதிகளில் எம்எல்ஏக்களின் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, மதுராந்தகம், பெருந்துறை ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் அண்மையில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில், தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிக்க : கள்ளக்குறிச்சிஎம்எல்ஏ மீதான புகார்: சாட்சியாக மாறும் நீதிபதி – வெளியான தகவல்
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் அது பல்வேறு சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும், தேர்தல் வழக்கில் வெற்றி பெறுபவரும், இடைத்தேர்தலில் வெற்றி பெறுபவரும் ஒரே தொகுதிக்கு தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதால் பிரச்சனை உண்டாகும் எனவும் கருத்து தெரிவித்தது.
மேலும், 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து கடந்த ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு நாளை (நவ.27) காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கவுள்ளது.