AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கொலையில் முடிந்த குடும்ப தகராறு.. காதல் மனைவியை வெட்டி வீசிய கொடூர கணவன்.. ரத்தம் சொட்ட சொட்ட போலீசில் சரண்!

Vellore murder : வேலூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்து ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் காவல் நிலையத்தில் கணவன் சரணடைந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலையில் முடிந்த குடும்ப தகராறு.. காதல் மனைவியை வெட்டி வீசிய கொடூர கணவன்.. ரத்தம் சொட்ட சொட்ட போலீசில் சரண்!
வேலூர் கொலை சம்பவம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 26 Nov 2026 21:56 PM IST

வேலூரில் குடும்ப தகராறு காரணமாக காதல் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி தெற்கு அவென்யூ சாலை பகுதியில் வசித்து வருபவர் ஹரிபிரசாத் ( 31 வயது). இவர், அதே பகுதியை சேர்ந்த கீர்த்திகா ( 27 வயது) என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருப்பத்தூர் மாவட்ட ஆவின் பால் பண்ணையில் இருந்து கடைகளுக்கு பால் பாக்கெட்டுகள், நெய் உள்ளிட்ட பொருட்களை வாகனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் வினியோகம் செய்யும் தொழிலில் ஹரிபிரசாத் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கணவன் – மனைவி இடையே குடும்ப தகராறு

அவர்களை பெற்றோர்கள் சமாதானம் செய்துள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு மீண்டும் தம்பதி இடையே பிரச்சினை ஏற்பட்டு தகராறாக மாறி உள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த ஹரி பிரசாத், மனைவி கீர்த்திகாவை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த கீர்த்திகா இது தொடர்பாக தனது பெற்றோருக்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அவரது வீட்டுக்கு சென்ற பெற்றோர் மகளை மட்டும் புதிதாக குடியேறிய அரப்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றனர். இரு மகன்களும் தந்தையுடன் இருந்து வந்தனர்.

மேலும் படிக்க: நிலத்தை அளக்க லஞ்சம்! கூகுள் பே-வில் விழுந்த ரூ. 25 ஆயிரம்.. கோவையில் சிக்கிய நில அளவையர்!

திருமண தகவல் மையத்துக்கு சென்ற தாய், மகள்

இந்த நிலையில், கீர்த்திகாவின் தாய் விஜயா சத்துவாச்சாரி வ.உ.சி. நகரில் உள்ள திருமண தகவல் மையத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை அவர் வழக்கம்போல வேலைக்கு புறப்பட்டு சென்ற நிலையில், கீர்த்திகா தலை மற்றும் முகம் உள்ளிட்ட பகுதிகளில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு உடன் வருவதாக தெரிவித்துள்ளார். அதன்படி, மகள் கீர்த்திகாவை, தாய் விஜயா சத்துவாச்சாரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை பெற்றுவிட்டு இருவரும் திருமண தகவல் மையத்துக்கு சென்றனர்.

மனைவியை கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரண்

அப்போது, தொலைபேசியில் தனது மனைவியை தொடர்பு கொண்ட ஹரிபிரசாத், எங்கு இருக்கிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு, தாய் விஜயா பணிபுரியும் திருமண தகவல் மையத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். செல்போன் இணைப்பை துண்டித்த சிறிது நேரத்தில் அங்கு சென்ற ஹரிபிரசாத் அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்தார். இதனை தடுக்க முயன்ற விஜயாவுக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, ஹரிபிரசாத் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் அரிவாளுடன் சரணடைந்தார். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க: மருமகளை வன்கொடுமை செய்த மாமனார்.. கர்ப்பத்தை கலைக்க சென்றதால் வெளிவந்த சம்பவம்.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி!

Follow Us