AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உச்சநீதிமன்ற தீர்ப்பு மீறப்பட்ட விவகாரம்! தவெக ஆட்சியை கலைக்கனுமா? கொந்தளித்த சிபிஎம் மாநில செயலர் சண்முகம்!

CPM Secretary Shanmugam : திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாத தவெக அரசை கலைக்க வேண்டும் என்ற கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியவற்றை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு மீறப்பட்ட விவகாரம்! தவெக ஆட்சியை கலைக்கனுமா? கொந்தளித்த சிபிஎம் மாநில செயலர் சண்முகம்!
பெ.சண்முகம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 26 Nov 2026 21:11 PM IST

தவெக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதற்கு சிபிஎம் மாநில செயலர் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்பதற்காக அரசைக் கலைக்க வேண்டும் என்று கூறினால் முதலில் கலைக்க வேண்டியது இந்த கல்யாண் சிங் அரசை தான். பாபர் மசூதியில் இருந்து ஒரு செங்கலை கூட அகற்ற மாட்டோம் இன்று உறுதிமொழியை உச்சநீதிமன்றத்தில் அழித்துவிட்டு என்று சொல்லிவிட்டு தான் கரசேவர்களை அவர்கள் அனுமதித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் பாபர் மசூதி இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உங்களால் என்ன செய்ய முடிந்தது. ஐயப்பன் கோவிலில் பெண்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து எத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்துத்வா வெறியர்கள் உடைய எதிர்ப்பின் காரணமாக தற்போது வரை அந்த தீர்ப்பு அமல்படுத்தப்படவில்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசு

காவிரியில் தமிழகத்திற்கு 177 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்து 13 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது வரை அந்த தீர்ப்பை கர்நாடக அரசு அமல்படுத்தவில்லை. இதுபோன்று பட்டியலிட்டால் உச்சநீதிமன்றம் தலையில் கை வைத்துக்கொண்டு தான் செல்ல வேண்டும். தீர்ப்பு சொல்லும் இடத்தில் அவர்கள் உள்ளனர். அமல்படுத்தாத போது, அதனை அமல்படுத்த வேண்டும் என்று வற்புறுத்த முடியுமே தவிர ஆட்சியை கலைப்பது என்கிற நடவடிக்கைக்கு செல்ல முடியுமா. ஆனால், தமிழக மக்கள் மத்தியில் ஒரு பதட்டத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் வகையில் மதவெறியர்கள் இந்த தீர்ப்பை அமல்படுத்தவில்லை.

மேலும் படிக்க: எத்தனை முறை தோற்றாலும் தோற்பேன்! ஆனால் பொது வேட்பாளராக போட்டியிட யார் ஆதரவையும் கேட்கமாட்டேன்.. சீமான் ஆவேசம்!

தவெக அரசை கலைக்க வேண்டுமென்ற பிரசாரம்

எனவே, தவெக அரசை கலைக்க வேண்டுமென்ற பிரச்சாரத்தை அவர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். இது எல்லாமே சட்டத்துக்கு விரோதமானதாகும். ஏனென்றால், தற்போது இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் அரசியல் சாசனத்தின் முகப்பு என்ன. மதச்சார்பற்ற ஜனநாயக சோசலிச குடியரசு என்பதுதான் நம்முடைய ஆட்சிக்கு வைத்திருக்கக்கூடிய பெயர். இந்த ஜனநாயகம் இருக்கின்ற காரணத்தினால் தான் நாம் இங்கு கூடியிருக்கிறோம். கருத்துக்களை தெரிவித்து வருகிறோம். அனைத்து உரிமைகளையும் அரசியலமைப்பு சாசன இந்திய குடிமக்களுக்கு வழங்கி உள்ளது.

அரசியல் சாசனத்தை மாற்ற பெரும்பான்மை இல்லை

இவற்றைப் பறிக்கக் கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் மேற்கொள்கிறார்கள். இத்தகைய சூழலில் அரசியல் சாசனத்தின் விழுமியங்களை பாதுகாப்பது தான் தற்போது இருக்கக்கூடிய முக்கிய பிரச்சினையாகும். அரசியலமைப்பு மாற்றப்பட்டாலோ அல்லது திருத்தப்பட்டாலோ அனைவரும் சமமான வாய்ப்பு என்கிற அடிப்படை கோட்பாடு என்பது குழிதோண்டி புதைக்கப்பட்டு விடும். இந்த அரசியல் சாசனத்தை ஏற்க மாட்டோம் என்ற கூட்டம் தான் மத்திய ஆட்சி பொறுப்பில் இருந்து கொண்டிருக்கிறது. எனவே, அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாததால் அரசியல் சாசனம் மாற்றப்படாமல் உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: ஊழலுக்கு எதிரான நடவடிக்கையால் சிலரின் பேஸ்மட்டம் ஆட்டம் கண்டுள்ளது..கல்வி விருது வழங்கும் விழாவில் முதல்வர் விஜய்!

Follow Us