AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்… தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதிய ஆளுநர்

Governor Writes to CM Vijay : தமிழகத்தின் பல்வேறு மாநிலப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் நீண்ட காலமாகக் காலியாக இருப்பதால், பல்கலைக்கழகங்களின் அன்றாட நிர்வாகப் பணிகள் மற்றும் கல்விச் செயல்பாடுகள் பாதிக்கப்படுகிவதாக தமிழக முதல்வர் விஜய்க்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்… தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதிய ஆளுநர்
ஆளுநருடன் முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 26 Nov 2026 20:57 PM IST

சென்னை, நவம்பர் 26 : துணைவேந்தர் நியமனத்தில் UGC பிரதிநிதியை சேர்க்க வேண்டும் எனவும் பல்கலைகழகத்தில் காலியாக உள்ள துணை வேந்தர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் நிலுவையில் உள்ள பட்டமளிப்பு விழாக்களை விரைந்து நடத்த வேண்டும் எனவும் தமிழக ஆளுநர் (TN Governor) முதல்வர் விஜய்க்கு  கடிதம் எழுதியுள்ளார். மேலும் துணை வேந்தர் நியமனத்தில் அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. துணை வேந்தர்கள் இல்லாததால் நிர்வாக பிரச்னை ஏற்படுகிறது எனவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதிய ஆளுநர்

இதுதொடர்பாக, முதல்வர் விஜய்க்கு நவம்பர் 25, 2026 அன்று ஆளுநர் கடிதம் எழுதியுள்ளதாக ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ‘தமிழகத்தின் பல்வேறு மாநிலப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் நீண்ட காலமாகக் காலியாக இருப்பதால், பல்கலைக்கழகங்களின் அன்றாட நிர்வாகப் பணிகள் மற்றும் கல்விச் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன’ என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : கார்த்திகை தீபத்திருவிழா பாதுகாப்புக்கு வந்த காவலர்.. பள்ளி கழிவறையில் சடலமாக மீட்பு.. திருவண்ணாமலையில் நடந்த சம்பவம்!

மேலும் அவர் பதிவில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படுவதிலும் தாமதம் ஏற்படுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தற்போது, மாநில பல்கலைக்கழகங்களின் நிர்வாக முடிவுகளை எடுக்க தமிழக அரசு அமைத்துள்ள ஒருங்கிணைப்புக் குழு நடைமுறையில் இருக்கிறது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் அன்றாட நிர்வாக மற்றும் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்த ஏற்பாடு போதுமானதாக இல்லை’ என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

எனவே, ‘சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகச் சட்டங்கள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) விதிமுறைகளுக்கு உட்பட்டு, முழுநேர துணைவேந்தர்களை நியமிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட இடங்களில் நிலுவையில் உள்ள பட்டமளிப்பு விழாக்களை விரைந்து நடத்துவதற்கான பல்கலைக்கழகம் வாரியான அட்டவணையைத் தயாரிக்க வேண்டும்’ எனும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள்

துணைவேந்தர் தேர்வுக்கான தேடல் மற்றும் தேர்வுக் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவரின் பிரதிநிதியைச் சேர்ப்பது தொடர்பாக, தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுவதாகக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், 2026 ஜனவரி 30, 2026, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், துணைவேந்தர் தேர்வுக் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி ஒருவர், பல்கலைக்கழக சிண்டிகேட் பிரதிநிதி ஒருவர், பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவரின் பிரதிநிதி ஒருவர் மற்றும் தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர் இடம்பெறலாம். இவை சம்பந்தப்பட்ட சட்ட விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : திருப்பரங்குன்றம் விவகாரம்: தவெக அரசு மீது நடவடிக்கை கோரி ஆளுநரிடம் மனு அளித்த பாஜக

மேலும் தேர்வுக் குழு அமைக்கப்பட்ட 15 நாட்களுக்குள் துணைவேந்தர் பதவிக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் அறிவிப்பு வெளியிடப்பட்ட 2 மாதங்களுக்குள் விண்ணப்பங்களைப் பரிசீலித்து நேர்காணல்களை முடிக்க வேண்டும் என்றும், தகுதியான 3 பேரை ஒருமனதாகத் தேர்வு செய்து முன்னுரிமை வரிசையில் பரிந்துரைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow Us