திருப்பரங்குன்றம் விவகாரம்: தவெக அரசு மீது நடவடிக்கை கோரி ஆளுநரிடம் மனு அளித்த பாஜக
Thiruparankundram Deepam Controversy : திருப்பரக்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாத தவெக அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக ஆளுநரிடம் பாஜக (BJP) மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மனு அளித்துள்ளார். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, நவம்பர் 25 : திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான வழக்கில் இந்த 2025 ஆம் ஆண்டு கார்த்திகை தீபத்தன்று தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் என இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் வழங்கியிருந்தது. இந்த நிலையில் கார்த்திகை தீப தினமான நவம்பர் 25, 2026 அன்று வழக்கமாக திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் உச்சி பிள்ளையார் கோவில் இருக்கும் இடத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. இது சர்ச்சையான நிலையில் திருப்பரக்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாத தவெக அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக ஆளுநரிடம் பாஜக (BJP) மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மனு அளித்துள்ளார்.
தவெக அரசு மீது நடவடிக்கை கோரி ஆளுநரிடம் மனு அளித்த பாஜக
இது தொடர்பாக தமிழக ஆளுநரை நவம்பர் 26, 2026 இன்று நேரில் சந்தித்த பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக அரசு மீது நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபத் திருநாளின்போது, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாமல் உதாசீனப்படுத்திய தமிழக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து விரிவான புகார் மனுவை அளித்தோம்.




இதையும் படிக்க : ஊழலுக்கு எதிரான நடவடிக்கையால் சிலரின் பேஸ்மட்டம் ஆட்டம் கண்டுள்ளது..கல்வி விருது வழங்கும் விழாவில் முதல்வர் விஜய்!
உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்கத் தவறியதோடு, இந்து மக்களின் மத உணர்வுகளையும் அடிப்படை உரிமைகளையும் புண்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்பட்டதை ஆளுநரிடம் சுட்டிக்காட்டினோம். மேலும், தங்களது உரிமைகளுக்காகவும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரியும் குரல் கொடுத்த பொதுமக்களைக் காவல்துறையினர் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதற்கும், அவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதிக்கும் வகையில் செயல்பட்டதற்கும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தோம் என்றார்.
பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவு
நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத தவெக அரசின் செயல்பாடுகளையும், பொதுமக்கள் மீதான காவல்துறை அடக்குமுறையையும் கண்டித்து மேதகு ஆளுநரிடம் புகார் மனு!
இன்று சென்னை மக்கள் மாளிகையில் மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. @rajendraarlekar அவர்களை நேரில் சந்தித்து, திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபத் திருநாளின்போது மாண்புமிகு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாமல் உதாசீனப்படுத்திய தமிழக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து விரிவான புகார் மனுவை அளித்தோம்.
உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்கத் தவறியதோடு, இந்து மக்களின் மத உணர்வுகளையும் அடிப்படை உரிமைகளையும் புண்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்பட்டதை ஆளுநரிடம் சுட்டிக்காட்டினோம்.
மேலும், தங்களது உரிமைகளுக்காகவும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரியும் குரல் கொடுத்த பொதுமக்களைக் காவல்துறையினர் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதற்கும், அவர்களது ஜனநாயக உரிமைகளைப் பாதிக்கும் வகையில் செயல்பட்டதற்கும் எங்களது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தோம்.
இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் மத உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் வலியுறுத்தினோம்.
நீதிமன்றத்தின் மாண்பைக் காப்பதும், மக்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதும் எங்களது உறுதியான கடமை. இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை எங்களது ஜனநாயகப் போராட்டம் தொடரும்!
இந்த நிகழ்வில் தமிழக பாஜகவின் மாநில துணைத்தலைவர் திரு @Chakravarthy257 அவர்கள் மற்றும் NGO பிரிவு மாநில அமைப்பாளர் திரு. @RaArjunamurthy அவர்கள் உடன் இருந்தனர்.
— Nainar Nagenthran (@NainarBJP) November 26, 2026
இதையும் படிக்க : Tamil Nadu Weather Alert: அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை – எங்கெல்லாம் தெரியுமா?
மேலும் பேசிய அவர், இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் மத உரிமைகள் தொடர்பான பிரச்னைகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தினோம்.
நீதிமன்றத்தின் மாண்பைக் காப்பதும், மக்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதும் உறுதியான கடமை. இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கும்வரை ஜனநாயகப் போராட்டம் தொடரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதக இந்த விவகாரத்தில் திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற முடியாததற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மன்னிப்பு கோரினார். உச்சநீதிமன்றத்தில் நவம்பர் 25, 2026 இன்று உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செயத ஆட்சியர், தூணில் தீபம் ஏற்ற மாவட்ட நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. கோயில் தேவஸ்தானத்தின் அங்கீகாரம் பெறவும் முயற்சி நடந்தது எனவும் தெரிவித்துள்ளார்.