AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather Alert: அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை – எங்கெல்லாம் தெரியுமா?

Tamil Nadu Weather forecast: : சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் குமரிக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வருகிற டிசம்பர் 2, 2026 வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tamil Nadu Weather Alert: அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை – எங்கெல்லாம் தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 26 Nov 2026 15:06 PM IST

சென்னை, நவம்பர் 26 : குமரிக்கடல் பகுதியிலிருந்து தமிழ்நாடு மற்றும் கேரளம் வழியாக தெற்கு உள் கர்நாடகா வரை சுமார் 1.5 கி மீ உயரம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Low Pressure Area) நிலவுகிறது. இதன் காரணமாக நவம்பர் 26, 2026 இன்றும் நவம்பர் 27, 2026 நாளையும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் குமரிக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வருகிற டிசம்பர் 2, 2026 வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நவம்பர் 26, 2026 இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : சென்னையை அதிரவைத்த போலி நகை மோசடி.. 25-க்கும் மேற்பட்ட வங்கிகளில் கைவரிசை காட்டிய கும்பல் கைது!!

அதன் படி நவம்பர் 26, 2026 இன்று திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும்மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நவம்பர் 27, 2026 நாளை தேனி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : தமிழ்நாட்டில் டிச.10 முதல் 23 வரை அரையாண்டு தேர்வு?.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?

சென்னை வானிலை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை நவம்பர் 26, 2026 இன்றும் நவம்பர் 27, 2026 நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us