AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.1,020 கோடி ஒப்பந்த முறைகேடு வழக்கு.. கே.என்.நேரு சகோதரரின் உதவியாளர் கைது!

Assistant to KN Nehru's Brother Arrested: சுமார் 1,020 கோடி ரூபாய் ஒப்பந்த முறைகேடு வழக்கில், கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் உதவியாளரான கவிபிரசாத்தை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஒப்பந்த முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூ.1,020 கோடி ஒப்பந்த முறைகேடு வழக்கு.. கே.என்.நேரு சகோதரரின் உதவியாளர் கைது!
கே.என்.நேரு
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 26 Nov 2026 10:46 AM IST

சென்னை, நவ.26: சுமார் 1,020 கோடி ரூபாய் ஒப்பந்த முறைகேடு மற்றும் ஊழல் புகார் தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் உதவியாளரான கவிபிரசாத்தை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பல்வேறு பணிகளுக்கான ஒப்பந்தங்களை முறைகேடாக வழங்கியதாகவும், ஒப்பந்ததாரர்களிடமிருந்து சட்டவிரோதமாகப் பணம் பெறப்பட்டதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, அவரது சகோதரர்கள், ரவிச்சந்திரன் மற்றும் உதவியாளர் கவிபிரசாத் உள்ளிட்ட 13 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக யாரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களிலும் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.

இதையும் படிக்க: ரூ. 400 கோடி மோசடி வழக்கு.. அன்பில் மகேஷ் உள்ளிட்ட மூவரிடம் 2வது நாளாக தீவிர விசாரணை!

விமான நிலையத் தடுப்பு:

இந்த வழக்கின் விசாரணையின் இடையே, ரவிச்சந்திரனின் உதவியாளரான கவிபிரசாத் முன்னதாக வெளிநாட்டுக்குச் செல்ல இருந்தபோது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரித்து அனுப்பி வைத்தனர். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே, தற்போது கவிபிரசாத் கைது செய்யப்பட்டுத் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெண்டர் முறைகேடு கோணம்:

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஒப்பந்தங்களை வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், சுமார் 1,020 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாகவும் ஏற்கனவே அமலாக்கத்துறை வழங்கிய தகவலின் அடிப்படையில்தான் லஞ்ச ஒழிப்புத் துறை இந்த விசாரணையைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. முதல் தகவல் அறிக்கையில் ரவிச்சந்திரன் மற்றும் கவிபிரசாத் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ள சூழலில், இந்த ஒப்பந்தங்கள் திட்டமிட்டு யாருக்கெல்லாம் வழங்கப்பட்டன, யாருக்கெல்லாம் ஒதுக்கீடு செய்யப்பட்டது மற்றும் முறையான நடைமுறைகளின்படியே டெண்டர்கள் ஒதுக்கப்பட்டனவா என்பது உள்ளிட்ட பல கோணங்களில் கவிபிரசாத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க: செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்.. விசாரணையை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு; குற்றவாளியாகக் கருதக் கூடாது என கருத்து!

தொடரும் புலன் விசாரணை:

ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் முந்தைய விசாரணையின்போது பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள கவிபிரசாத்திடம், ஒப்பந்த முறைகேடு தொடர்பான விவரங்களைக் காவல்துறையினர் துருவி விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கின் தொடர்ச்சியாக லஞ்ச ஒழிப்புத் துறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் கவனம் பெற்றுள்ளன.

Follow Us