பவர் ஹவுஸ் படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் கூட்டணி வைக்க உள்ளது யாருடன் தெரியுமா? வைரலாகும் தகவல்!
Vikram New Movie Update | தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் தற்போது பவர் ஹவுஸ் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வரும் நிலையில் அடுத்ததாக எந்த இயக்குநரின் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்த அப்டேட் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விக்ரம் (Actor Vikram). சினிமாவில் வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்டாக எண்ட்ரி கொடுத்து தற்போது பல ஹிட் படங்களில் நடித்து உச்ச நடிகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய மொழி ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் விக்ரம் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் வீர தீரன் சூரன். கடந்த 2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான இந்தப் படம் விம்ரசன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் விக்ரமின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வரும் படம் பவர் ஹவுஸ். இயக்குநர் ஆனந்த் சங்கர் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட்களும் வெளியாகி வைரலாகி வருகின்றது.




நடிகர் விக்ரம் அடுத்த படத்திற்காக கூட்டணி வைக்க உள்ளது யாருடன்?
அதன்படி சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, சியான் விக்ரமின் அடுத்த திரைப்படமான பவர்ஹவுஸ் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விக்ரம் தனது அடுத்த திட்டத்தை ஹாய் படத்தை இயக்கிய இயக்குநர் விஷ்ணு எடவனுடன் இணைந்து மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கக்கூடும் என்றும், இதற்கு அனிருத் இசையமைக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Also Read… இஞ்சி வெல்லம் படத்தின் முதல் சிங்கிள் குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் – வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#ChiyaanVikram’s next movie #Powerhouse is currently progressing with its shoot. #Vikram is planning his next project with #Hi director #VishnuEdavan, which is likely to be produced by AGS Entertainments and is expected to be an #Anirudh musical.
Source – Valai Pechu https://t.co/Hr8LnyRWN2
— Movies Singapore (@MoviesSingapore) November 25, 2026
Also Read… அபிஷன் ஜீவிந்தின் பிக்காசோ படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்!