AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Vijay Sethupathi: நான் அப்போதே மிஷ்கினின் அந்த படத்திற்கு ஆடிஷன் செய்திருந்தேன் – விஜய் சேதுபதி!

Vijay Sethupathi About Past Audition: தமிழில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பிலும், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்திலும் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் ட்ரெயின். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது, முன்பு மிஷ்கின் படத்திற்கு ஆடிஷன் செய்திருந்தது பற்றி கூறியுள்ளார்.

Vijay Sethupathi: நான் அப்போதே மிஷ்கினின் அந்த படத்திற்கு ஆடிஷன் செய்திருந்தேன் – விஜய் சேதுபதி!
மிஸ்கின் மற்றும் விஜய் சேதுபதிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 25 Nov 2026 20:53 PM IST

நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் பத்தா (Baththa Movie). இந்த படத்தை இயக்குநர் பாலாஜி தரணீதரன் (Director Balaji Tharaneetharan) இயக்கியிருந்த நிலையில், கடந்த 2026 ஆண்டு அக்டோபர் 1ம் தேதியில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி தனது நடிப்பின் மூலமாக ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்த படமானது அவருக்கும் சிறப்பான வெற்றியை வழங்கியிருந்தது. இந்த படத்திற்கு பின், விஜய் சேதுபதியின் நடிப்பில் அடுத்து வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் ட்ரெயின் (Train Movie).

இதை இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் (Director Mysskin) இயக்க, கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இப்படமானது வரும் 2026 டிசம்பர் 4ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளானது சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இப்படத்திற்கு முன் மிஷ்கினின் படத்திற்கு ஆடிஷன் செய்தது பற்றி விஜய் சேதுபதி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸாகும் அண்ணாமலை படம்!

முன்பே மிஷ்கின் படத்திற்கு ஆடிஷன் செய்தது பற்றி பேசிய விஜய் சேதுபதி:

அந்த நேர்காணலில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “நான் நிறைய படங்களின் ஆடிஷன் போயிருக்கேன். அஞ்சாதே மற்றும் நந்தா போன்ற படங்களுக்கான ஆடிஷன் சென்றிருந்தேன். அஞ்சாதே படம் மிஷ்கின் சாரின் டி.நகர் அலுவலகத்தில் நடந்தது. நான் பல படங்களுக்கு ஆடிஷன்களில் கலந்துகொண்டிருந்ததால், அந்த இயக்குநருக்கு என்னைத் தெரிந்திருக்கவில்லை. நான் மிஷ்கின் சாரின் படங்களைப் பார்த்திருக்கிறேன், அவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தினை இயக்கும் நானி பட இயக்குநர்? வைரலாகும் தகவல்

அதனால்தான், அவருடன் பணியாற்ற வேண்டும் என்ற உண்மையான ஆசையால், அவருடைய படத்திற்கான ஆடிஷனுக்குச் சென்றேன். அஞ்சாதே படமானது ரிலீஸானபோது, ​​நான் அதைப் பார்க்க ஆசைப்பட்டேன். படத்தின் டைமிங் சுமார் 3 மணி 14 நிமிடங்கள், மேலும் திரையரங்கம் மிகவும் கூட்டமாக இருந்தது. அதனால், நான் அந்தப் படத்தை நைட் ஷோவில் பார்த்தேன்” என அதில் தெரிவித்திருந்தார்.

ட்ரெயின் திரைப்படம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்த எக்ஸ் பதிவு:


விஜய் சேதுபதியின் நடிப்பில் ட்ரெயின் மற்றும் பிசாசு 2 போன்ற படங்கள் இயக்குநர் மிஷ்கின் இயக்கியுள்ளார். இதில் ட்ரெயின், 2026 டிசம்பர் 4ம் தேதியில் வெளியாகிறது. ஆனால் பிசாசு 2 படத்தின் வெளியீட்டு குறித்து இதுவரை எந்த தகவல்களும் இல்லை. இதற்க்கு பின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் பாக்கெட் நாவல் என்ற படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்படம் 2027ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகிறது.

Follow Us