AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Train Movie: பயணத்திற்குத் தயாராகுங்கள்.. விஜய் சேதுபதியின் ட்ரெயின் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Train Movie Release Date Out: தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திர நாயகியாக இருந்துவருபவர் விஜய் சேதுபதி. இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் இவர் நடித்திருந்த புதிய திரைப்படம்தான் ட்ரெயின். தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Train Movie: பயணத்திற்குத் தயாராகுங்கள்.. விஜய் சேதுபதியின் ட்ரெயின் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ட்ரெயின் திரைப்பட வெளியீட்டு தேதிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 12 Oct 2026 20:42 PM IST

கோலிவுட் மக்கள் மத்தியில் பேமஸான நாயகனாக இருந்துவருபவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரை தமிழ் சினிமாவில் “மக்கள் செல்வன் விஜய் சேதுபதி” என அன்போடு ரசிகர்கள் அழைத்துவருகிறார்கள். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்களில் நாயகனாக நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து புதிய படங்களும் உருவாகிவருகிறது. இந்த 2026ம் ஆண்டில் விஜய் சேதுபதியின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பத்தா (Baththa). இயக்குநர் பாலாஜி தரணீதரன் (Balaji Tharaneetharan) இயக்கத்தில் வெளியான இப்படமானது திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டுவருகிறது. அந்த விதத்தில் மேலும் புதிய படங்களிலும் விஜய் சேதுபதி பணியாற்றிவருகிறார். இந்த வரிசையில் இயக்குநர் மிஷ்கின் (Mysskin) இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்திருந்த திரைப்படம்தான் ட்ரெயின் (Train). இப்படமானது கிட்டத்தட்ட உருவாகி ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. இதை இயக்குநர் மிஷ்கின் இயக்க, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு (Kalaipuli S Thanu) , வீ க்ரியேஷன் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார்.

இப்படத்திற்கு மிஷ்கின் இசையமைத்துள்ள நிலையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியாகாது என சமீபத்தில் மிஷ்கின் புலம்பிய நிலையில், தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: பார்வதியின் நடிப்பில் வெளியான பிரதம திருஷ்டிய குட்டக்கர் படம் எப்படி இருக்கு? ஓடிடி விமர்சனம் இதோ!

விஜய் சேதுபதியின் ட்ரெயின் பட ரிலீஸ் எப்போது:

நடிகர் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், நாசர், யுகி சேது மற்றும் கலையரசன் என பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது ஒரு ட்ரெயினில் நடக்கும் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் இப்படமானது. 2026ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கல்கி 2 படப்பிடிப்பில் இணையும் நடிகை சாய் பல்லவி? வைரலாகும் தகவல்

ட்ரெயின் படத்தின் ரிலீஸ் குறித்து நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்த எக்ஸ் பதிவு:

இந்த ட்ரெயின் திரைப்படமானது சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனது மனைவியிடம் சண்டை போட்ட விஜய் சேதுபதி ட்ரெயினில் ஏறுகிறார். அந்த ட்ரெயினில் எறிய பிறகு அவார்டின் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் மற்றும் பிரச்சனைகளை மையப்படுத்தியே இந்த திரைப்படமானது இயக்கப்பட்டுள்ளதாம். இதை இயக்குநர் மிஷ்கின் நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us