கல்கி 2 படப்பிடிப்பில் இணையும் நடிகை சாய் பல்லவி? வைரலாகும் தகவல்
Sai Pallavi to join Kalki 2 movie shooting | தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் கல்கி படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
மலையாள சினிமாவில் மாபெரும் வெற்றியைப் பெற்ற பிரேமம் என்ற படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் நடிகை சாய் பல்லவி. இவர் நாயகியாக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை சாய் பல்லவி தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் தற்போது நடித்து வருகிறார். அதன்படி நடிகை சாய் பல்லவி நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் பான் இந்திய மொழிகளில் வரலாற்று புனைக் கதைகளை மையமாக வைத்து உருவாகும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை சாய் பல்லவி. அதன்படி தற்போது இந்தி மொழியில் உருவாகி வரும் ராமாயணா படத்தில் சீதை வேடத்தில் நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார்.
அது மட்டும் இன்றி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பான் இந்திய மொழிகளில் பிசியான நாயகியாக வலம் வரும் நடிகை சாய் பல்லவி நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.




கல்கி 2 படப்பிடிப்பில் இணையும் நடிகை சாய் பல்லவி?
அதன்படி தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி சாய் பல்லவி அக்டோபர் 17 மற்றும் 18 தேதிகள் வாக்கில் படப்பிடிப்பில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமிதாப் பச்சனுடனான மற்றொரு படப்பிடிப்பு கட்டம் இம்மாதம் மும்பையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபாஸ் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Nivin Pauly: நிவின் பாலியின் பர்த்டே.. பென்ஸ் பட வால்டர் போஸ்டரை பகிர்ந்த படக்குழு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Kalki2 Shooting Update!
#SaiPallavi is reportedly expected to join the sets around October 17–18.
Another shooting schedule with #AmitabhBachchan is expected to take place in Mumbai this month.
#Prabhas is reportedly set to begin shooting in the second week of December. https://t.co/ItqUZio5CB
— Filmyscoops (@Filmyscoopss) October 11, 2026
Also Read… தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் மமிதா பைஜூ… அட இந்த படத்திலா?