AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Nivin Pauly: நிவின் பாலியின் பர்த்டே.. பென்ஸ் பட வால்டர் போஸ்டரை பகிர்ந்த படக்குழு!

Actor Nivin Paulys 42nd Birthday: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்கப்படும் நாயகன்தான் நிவின் பாலி. இவர் இன்று (11/10/2026) 42வது பிறந்தநாளை கொண்டடைவருகிறார். அதை முன்னிட்டு பென்ஸ் படத்திலிருந்து இவர் நடிக்கும் வால்டர் கதாபத்திர போஸ்டர் பகிரப்பட்டுள்ளது.

Nivin Pauly: நிவின் பாலியின் பர்த்டே.. பென்ஸ் பட வால்டர் போஸ்டரை பகிர்ந்த படக்குழு!
நிவின் பாலிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 11 Oct 2026 20:57 PM IST

மலையாளம் சினிமாவில் பேமஸான நடிகர்களில் ஒருவர்தான் நிவின் பாலி (Nivin Pauly). இவர் தொடர்ந்து மலையாள மொழியில் படங்களில் நாயகனாக நடித்து அசத்திவருகிறார். மேலும் தமிழ் படங்களிலும் நடிக்க ஆர்வம் கொண்டு, புதிய படங்களிலும் பணியாற்றிவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஏழு கடல் ஏழு மலை (Yezhu Kadal Yezhu Malai). இதை இயக்குநர் ராம் (Ram) இயக்கியிருந்த நிலையில், கடந்த 2026ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் சூரி, நிவின் பாலி மற்றும் அஞ்சலி இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் இவர் தமிழில் நடித்துவரும் திரைப்படம்தான் பென்ஸ் (Benz). இப்படமானது லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) தயாரிப்பில், LCU-வில் உருவாகும் புதிய திரைப்படமாகும்.

இந்த படத்தை இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் (Bakkiyaraj Kannan) இயக்கிவரும் நிலையில், இதன் ஷூட்டிங்கில் நிவின் பாலி பிசியாக உள்ளார். அந்த விதத்தில் இவர் இன்று (11/10/2026) தனது 42வது பிறந்தநாளை கொண்டடைவருகிறார். அதை முன்னிட்டு, பென்ஸ் படத்தில் இவர் நடிக்கும் வால்டர் கதாபாத்திரத்தின் ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி படத்தின் ‘தீரம் தீரம்’ பாடல் வெளியீடு!

நிவின் பாலியின் பிறந்தநாளை முன்னிட்டு பென்ஸ் படக்குழு பகிர்ந்த ஸ்பெஷல் போஸ்டர்:

பென்ஸ் படத்தில் நிவின் பாலியின் வேடம்:

இந்த பென்ஸ் படத்தை இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கிவருகிறார். இவர் ரெமோ படத்தை இயக்கி பிரபலமானவர். இவரின் இயக்கத்தில் பென்ஸ் படமானது உருவாக்கப்பட்டுவரும் நிலையில், இதில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். மேலும் இதில் மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நடிகையாக நடித்துள்ளார். இதில் நடிகர் நிவின் பாலி வால்டர் என்ற வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

இதையும் படிங்க: ராம யுகத்தின் ஆரம்பம்… ரன்பீர் – சாய் பல்லவியின் ராமாயணா பார்ட் : 1 பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இதுதான் தமிழ் சினிமாவில் இவர் வில்லனாக நடிக்கும் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் 4வது ஷெட்டியுள் ஷூட்டிங்கில் நிவின் பாலி இருக்கிறார். அந்த விதத்தில் இப்படத்தை வரும் 2027ம் ஆண்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது. இப்படத்தில் நடிகர் ரவி மோகனும் முக்கியமான வேடத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுகுறித்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us