AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Nivin Pauly: பல கஷ்டங்கள்.. நிவின் பாலியின் ஏழு கடல் ஏழு மலை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!

Yezhu Kadal Yezhu Malai Movie Making Video: தென்னிந்திய சினிமாவில் பேமஸான் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் நிவின் பாலி. இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் ஏழு கடல் ஏழு மலை. இப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெரும் நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

Nivin Pauly: பல கஷ்டங்கள்.. நிவின் பாலியின் ஏழு கடல் ஏழு மலை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!
ஏழு கடல் ஏழு மலை படத்தின் மேக்கிங் வீடியோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 04 Oct 2026 18:05 PM IST

மலையாளம் சினிமாவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் நிவின் பாலி (Nivin Pauly). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து புதிய படங்கள் வெளியாகிவருகிறது. பல ஆண்டுகளுக்கு பின் இவர் நேரடியாக தமிழில் நடித்திருந்த திரைப்படம்தான் ஏழு கடல் ஏழு மலை (Yezhu Kadal Yezhu Malai). இந்த படத்தை இயக்குநர் ராம் (Director Ram) இயக்க, மிகவும் பிரம்மாண்டமான மற்றும் சிறப்பான கதைக்களத்தில் இப்படமானது உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படமானது பிரம்மாண்டமான கதைக்களத்தில் உருவாகியிருந்த நிலையில், கடந்த 2026ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது.

இந்த படத்தில் நிவின் பாலி, அஞ்சலி (Anjali) மற்றும் சூரி (Soori) போன்ற நடிகர்களும் இணைந்து நடித்திருந்தனர். பேண்டஸி மற்றும் திரில்லர் பாணியில் இப்படமானது வெளியாகியிருந்தது. அந்த விதத்தில் இப்படத்தின் காட்சிகளுக்காக படக்குழு கஷ்டப்பட்ட விஷயங்கள் குறித்த மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஒன்று சேர்ந்தால் மட்டும் தான் காதலா? 8 ஆண்டுகளை நிறைவு செய்தது விஜய் சேதுபதி – த்ரிஷாவின் 96 படம்!

நிவின் பாலியின் ஏழு கடல் ஏழு மலை படத்தின் மேக்கிங் வீடியோ குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு;

நடிகர் நிவின் பாலி தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் பல ஆண்டுகளுக்கு பின் தமிழில் இந்த ஏழு கடல் ஏழு மலை படமானது வெளியானது. இந்த படமானது இவருக்கு ஓரளவு நல்ல வரவேற்பை திரையரங்குகளில் பெற்றுக்கொடுக்கிறது. இப்படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்துள்ளார். இந்த படம் இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், காட்சிகள் ஒன்னொன்ரும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த படத்தை மாரி செல்வராஜ் முதல் பல்வேறு இயக்குநர்களும் பாராட்டிவருகிறார்கள்.

இதையும் படிங்க: அனைத்திலும் சிறந்த படைப்பாக அமைந்துள்ளது டோரதி – பாராட்டி தள்ளிய இயக்குநர் அஜய் ஞானமுத்து

அந்த விதத்தில் இப்படமானது உருவாக்கப்பட்ட மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், இணையத்தில் மக்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது. மேலும் இப்படமானது வெளியான முதல் நாளிலே உலகமெங்கும் சுமார் ரூ 2 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இப்படத்திற்கு அடுத்ததாக தமிழில் அடுத்தடுத்த புதிய பி[அடங்களும் வெளியாகியுள்ள நிலையில், இப்படங்களை வசூல் கலவையாகவே வருகிறது. வார இறுதியில் உள்ள நிலையில், மேலும் விடுமுறை தினங்களை முன்னிட்டு மேலும் வசூல் அதிகரித்திருக்கும் என கூறப்படுகிறது.

Follow Us