Nivin Pauly: ஆவலுடன் எதிர்பார்த்த அப்டேட்.. பென்ஸ் பட 4வது ஷெட்டியூலில் இணைந்த நிவின் பாலி!
Benz 4th Schedule Shooting: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் நிவின் பாலி. தமிழில் இவர் வில்லனாக நடித்துவரும் புதிய படம்தான் பென்ஸ். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், 4வது ஷெட்டியூலில் நிவின் பாலி இணைந்துள்ளார்.
மலையாளம் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் நிவின் பாலி (Nivin Pauly). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் பெத்தலகேம் குடும்ப யூனிட் (Bethlehem Kudumba Unit). இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியில் உலகமெங்கும் வெளியான நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ (Mamitha Baiju) இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது வெளியாகி உலகமெங்கும் ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூலைப் பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் பல படங்களில் நிவின் பாலி ஒப்பந்தமாகிவருகிறார். இந்நிலையில் கடந்த 2025ம் ஆண்டில் இவர் தமிழில் ஒப்பந்தமான திரைப்படம்தான் பென்ஸ் (Benz).
இந்த படத்தை இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் (Bakkiyaraj Kannan) இயக்கிவரும் நிலையில், இப்படத்தின் 4வது ஷெட்டியூலில் நடிகர் நிவின் பாலி இணைந்துள்ளார். இது தொடர்பான பதிவை படக்குழு வெளியிட்டுள்ளது. நிவின் பாலி பென்ஸ் படத்தில் இணைத்துள்ள குறித்த ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: ஜீ 5 ஓடிடியில் புதிய சாதனையைப் படைத்தது தளபதி விஜயின் ஜன நாயகன் படம்
பென்ஸ் படத்தில் நிவின் பாலி இணைந்தது குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Here’s the update you’ve been waiting on.#Benz Fourth Schedule Begins 💥@offl_Lawrence @iam_RaviMohan @nivinofficial @Dir_Lokesh @PassionStudios_ @TheRoute @GSquadOffl @Sudhans2017 @Jagadishbliss @bakkiyaraj_k @SaiAbhyankkar @philoedit @ActionAnlarasu @sureshchandraa… pic.twitter.com/LlPhudlHvm
— Passion Studios (@PassionStudios_) October 3, 2026
நிவின் பாலி கைவசம் உள்ள திரைப்படங்கள் லிஸ்ட்:
மலையாள சினிமாவில் சிறப்பான நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறது நிவின் பாலி. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பெத்தலகேம் குடும்ப யூனிட். இந்த படத்தை இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கியிருந்த நிலையில், கடந்த 2026ம் ஆண்டில் ஆகஸ்ட் 21ம் தேதியில் வெளியானது. இந்த படமானது இவருக்கு மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பின் தமிழில் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனின் இயக்கத்தில் பென்ஸ் படத்திலும், இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் விஜயம் என்ற படத்திலும், அறிமுக இயக்குநர் இயக்கத்தில் ருக்மிணி வசந்துக்கு ஜோடியாக புது படத்திலும் நடித்துவருகிறார்.
இதையும் படிங்க: சென்னையில் நடைபெறும் சிவகார்த்திகேயனின் SK27 பட ஷூட்டிங் – வைரலாகும் போட்டோஸ்!
மேலும் தமிழில் புதிய படத்தில் நாயகனாக நடிப்பதற்கும், மோகன்லாலுடன் புதிய படத்திலும் நடிக்கவுள்ளார் என வட்டாரங்கள் கூறுகிறது. தற்போது இவர் பென்ஸ் படத்தின் ஷூட்டிங் பிசியாக இருந்துவரும் நிலையில், இதைய தொடர்ந்து புதிய படங்களில் இணைவார் என கூறப்படுகிறது.