AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Nivin Pauly: எதாவது பிரச்சன வரும்போது.. மோகன்லால் சார் தைரியம் கொடுப்பாரு – நிவின் பாலி பேச்சு!

Nivin Puly About Mohanlals Support: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்ஜ்களில் ஒருவராக இருந்துவருபவர் நிவின் பாலி. இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புது படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நிவின் பாலி, மோகன்லால் குறித்து பெருமையாக பேசியுள்ளார்.

Nivin Pauly: எதாவது பிரச்சன வரும்போது.. மோகன்லால் சார் தைரியம் கொடுப்பாரு – நிவின் பாலி பேச்சு!
மோகன்லால் மற்றும் நிவின் பாலிImage Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 01 Oct 2026 22:10 PM IST

மலையாளம் சினிமாவின் மூலமாக நாயகனாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் நிவின் பாலி (Nivin Pauly). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் ஏழு கடல் ஏழு மலை (Yezhu Kadal Yezhu Malai). இந்த படத்தை இயக்குநர் ராம் (Ram) இயக்கியிருந்த நிலையில், கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகிவந்தது. இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டில் வெளியாக காத்திருந்த நிலையில், சில காரணங்களால் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின், இன்று 2026ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதியில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த படமானது திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்த படமானது சுவாரஸ்யமான கதையில் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (01/20/2026) திரையரங்குகளிலில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நிவின் பாலி, மலையாள நடிகர் மோகன்லால் தனக்கு செய்த உதவி மற்றும் பலம் குறித்து பகிர்ந்துள்ளார். அது என்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: உங்கள் வரவு நல்வரவாகட்டும் சஞ்சய்.. ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தை வாழ்த்திய சூர்யா – ஜோதிகா!

மோகன்லால் செய்த உதவி குறித்து பேசிய நிவின் பாலி:

அந்த நேர்காணலில் பேசிய நிவின் பாலி, “சமீபத்தில் எனக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டபோது, ​​லால் சார் தான் முதலில் அழைத்து, ‘கவலைப்படாதீர்கள், நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம்’ என்று கூறினார். அந்த அழைப்பு எனக்கு மிகுந்த பலத்தை அளித்தது.

இதையும் படிங்க: ரவுண்டுகட்டி அடிக்கும் போட்டியாளர்கள்.. திணறும் தான்யா – வைரலாகும் புரோமோ!

நான் இப்போதும் அவருடன் மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன். கதைகள் வந்துகொண்டிருக்கின்றன, நாங்கள் இருவரும் இணைந்து ஒரு படம் செய்வதற்குப் பொருத்தமான ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறேன். விரைவில் கிடைக்கும் என நம்புகிறேன்”என அதில் ஓபனாக கூறியுள்ளார்.

ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் குறித்து நிவின் பாலி குறித்து வெளியிட்ட எக்ஸ் பதிவு:

நிவின் பாலி தமிழ் சினிமாவில் தற்போது நடித்துவருவதை அதிகரித்துள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஏழு கடல் ஏழு மலை. இந்த படத்திற்கு பின் இவர் தமிழில் நடித்துள்ள திரைப்படம்தான் பென்ஸ். இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படமானது சிறப்பான கதையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நிவின் பாலி வில்லனாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us