AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வெளியானது ஏழு கடல் ஏழு மலை படத்தின் முதல் 3 நிமிட காட்சி… கொண்டாடும் ரசிகர்கள்

Yezhu Kadal Yezhu Malai Movie Intro | தமிழ் சினிமாவில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஏழு கடல் ஏழு மலை. இந்தப் படத்தின் முதல் 3 நிமிட காட்சியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

வெளியானது ஏழு கடல் ஏழு மலை படத்தின் முதல் 3 நிமிட காட்சி… கொண்டாடும் ரசிகர்கள்
ஏழு கடல் ஏழு மலை Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Sep 2026 12:29 PM IST

மலையாள சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் சாதனைப் படைத்து வருகின்றது. தொடர்ந்து மலையாள சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் நிவின் பாலி அவ்வபோது தமிழ் மொழியிலும் படங்களில் நடித்து உள்ளார். அதன்படி இறுதியாக கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் நிவின் பாலி தமிழ் மொழியில் ரிச்சி என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. அந்தப் படத்தை தொடர்ந்து சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்து உள்ளார் நடிகர் நிவின் பாலி.

அதன்படி தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குநர் ராம் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் ஏழு கடல் ஏழு மலை. இந்தப் படம் முன்பே உருவாகி இருந்தாலும் திரையரங்குகளில் வெளியாகாமல் பல வெளிநாடுகளில் திரைப்பட விழாக்காளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வெளியானது ஏழு கடல் ஏழு மலை படத்தின் முதல் 3 நிமிட காட்சி:

அதனைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது ஏழு கடல் ஏழு மலை படம். இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி உடன் இணைந்து நடிகர்கள் அஞ்சலி மற்றும் சூரி முக்கிய வேடத்தில் நடித்து உள்ள நிலையில் படம் நாளை 01-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தில் இருந்து முதல் மூன்று நிமிட காட்சிகளை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… சுற்றுலா தலமாக மாறியது தளபதி விஜயின் லியோ படத்தில் வந்த இடம் – குவியும் ரசிகர்கள்!

நடிகர் நிவின் பாலி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸில் மாஸ் காட்டிய குமரன்… வாயடைத்து நின்ற லக்‌ஷ்மி பிரியா – வைரலாகும் வீடியோ!

Follow Us