AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நீங்க ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க… எனக்கு ரூல்ஸ் பிடிக்காது… பிக்பாஸில் அடாவடி செய்யும் முனியம்மாள் – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் காமென் மேன் நிகழ்ச்சியில் வெற்றிப் பெற்று உள்ளே வந்த முனியம்மாள் வந்ததில் இருந்தே மற்ற போட்டியாளுக்கு எதிராகவே விளையாடி வரும் நிலையில் இன்று வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரலாகி வருகின்றது.

நீங்க ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க… எனக்கு ரூல்ஸ் பிடிக்காது… பிக்பாஸில் அடாவடி செய்யும் முனியம்மாள் – வைரலாகும் வீடியோ
பிக்பாஸ் தமிழ் சீசன் 10Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Sep 2026 12:24 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தற்போது முன்று வாரங்கள் நிறைவடைந்து 4-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பங்கேற்றது போல பொதுமக்களுக்கு பிக்பாஸில் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு வழங்க்கப்பட்டது. அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பம் இருக்கும் மக்களுக்காக காமென் மேன் என்ற போட்டியை பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி குழு நடத்தியது. அந்தப் போட்டியில் இருந்து இதுவரை 4 போட்டியாளர்கள் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சிக்குள் அனுப்பட்டனர். அதில் ஒருவர் எவிக்டான நிலையில் தற்போது மூன்று போட்டியாளர்கள் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் உள்ளனர். காமென் மேன் நிகழ்ச்சியில் இருந்து வந்த இந்த மூன்று போட்டியாளர்களுமே பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கூட்டத்தில் கொவிந்தா போடாமல் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் பேசி தனித்து விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து முனியம்மாவின் செயல்கள் பார்வையாளர்களையும் போட்டியாளர்களை பல இடங்களில் எரிச்சலை மூட்டும் விதமாகவே இருந்து வருகிறது. ஒரு பக்கம் எரிச்சலாக இருந்தாலும் மறுபக்கம் தனது நிலையில் எப்போது மாறாமல் ஒரே மாதிரி இருக்கிறார் என்றும் பாராட்டப்படுகிறார்.

பிக்பாஸில் அடாவடி செய்யும் முனியம்மாள் – வைரலாகும் வீடியோ:

இப்படி இருக்கும் நிலையில் இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் 22-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஆப்பிளை முனியம்மா எடுத்து சாப்பிடும் போது மற்ற போட்டியாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அப்போது முனியம்மா நீங்க வேணும்னா ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க.. நான் எல்லாம் ரூல் பண்ணமாட்டேன் என்று கூறி வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… மலையாள சினிமாவை தெறிக்கவிடும் நிவின் பாலியின் பெத்தலேக குடும்ப யூனிட் படம் – இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Chiranjeevi: 90ஸ்-ல் அவரின் அப்பாவை பார்த்ததுபோலவே… ஜேசன் சஞ்சய் குறித்து புகழ்ந்து பேசிய தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி!

Follow Us