மலையாள சினிமாவை தெறிக்கவிடும் நிவின் பாலியின் பெத்தலேக குடும்ப யூனிட் படம் – இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?
Bethlehem Kudumba Unit Movie Box Office Collection Update | மலையாள சினிமாவில் நடிகர் நிவின்பாலி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள படம் பெத்தலேக குடும்ப யூனிட். இந்தப் படம் இதுவரை வசூல் செய்துள்ளது எவ்வளவு என்பது குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
மலையாள சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவர் சினிமாவில் நடிகராக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் படங்களில் நாயகனாக நடிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து நாயகனாக நடிகர் நிவின் பாலி நடிக்கத் தொடங்கிய போது தொடர்ந்து அவரது படங்கள் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. தொடர்ந்து மலையாள சினிமாவில் ஹிட் படங்களைக் கொடுத்து வந்த நிவின் பாலிக்கு சினிமாவில் ஒரு கட்டத்தில் தொடர் தோல்விகள் மட்டுமே இருந்தது. அவ்வளவுதான் நிவின் பாலியின் சினிமா கெரியர் முடிந்துவிட்டது என்று எண்ணம் தோன்றும் போது ஒரு மாஸான கம்பேக்கை கொடுத்தார் நடிகர் நிவின் பாலி.
அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகிறது. மேலும் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி படங்கள் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாள சினிமாவை தெறிக்கவிடும் பெத்தலேக குடும்ப யூனிட் படம்:
அதன்படி நடிகர் நிவின் பாலி நடிப்பில் மலையாள சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பெத்தலேக குடும்ப யூனிட். இந்தப் படத்தை இயக்குநர் கிரிஷ் ஏடி எழுதி இயக்கி இருந்தார். இவரது இயக்கத்தில் வெளியான முந்தைய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது போல இந்த பெத்தலேக குடும்ப யூனிட் படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜூ நடித்துள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து பல முக்கிய நடிகர்களும் நடித்து உள்ளனர். இந்த நிலையில் இந்தப் படம் உலக அளவில் சுமார் 327 கோடிகளைக் கடந்து வசூலில் சாதனைப் படைத்து வருவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… பிக் பாஸில் தலைவர் எக்சிட் லிஸ்ட்.. இந்தவாரம் வெளியேற்றப்படுபவர் இவரா?
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#BethlehemKudumbaUnit 35 Days Worldwide Box Office Estimate;
Kerala : ₹151.80 Cr
Rest of India : ₹37.4 CrOverseas ~ .5M | ₹138.5 Cr
Total Worldwide Gross : ₹327.70 Cr
Industry Hit of Mollywood 🥇🔥
4th Highest South Indian Grosser of The Year✅ pic.twitter.com/BgMgGbt67H— South Indian BoxOffice (@BOSouthIndian) September 25, 2026
Also Read… Nivin Pauly: பென்ஸ் படத்தின் நிலை என்ன? அப்டேட் கொடுத்த நிவின் பாலி!



