மாஸ்டர் பிளான் போடும் எதிரணி.. கலாய்த்து பேசிய ஆளும் அணி – வைரலாகும் புரோமோ!
Ruling Team Vs Opposition Team: ரியாலிட்டி நிகழ்ச்சியாக விஜய் டிவியின் டிஆர்பி-யை தெறிக்கவிட்டுவரும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 10. இந்த நிகழ்ச்சியானது தொடங்கி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் நிலையில், ஆளும் அணி மற்றும் எதிர் அணி இடையே பிரச்சனைகள் நிலவுகிறது. இந்நிலையில் ஆளும் அணி எதிர் அணியை கலாய்க்கும் புரோமோ வெளியாகி வைரலாகிவருகிறது.
விஜய் டிவியில் (Vijay TV) ஒளிபரப்பாகிவரும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியை போலவே இந்தியாவில் மற்ற மொழிகளிலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது. தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கிய நிலையில், கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 06ம் தேதியில் தொடங்கப்பட்டிருந்தது. இதே தேதியில் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது ஆளும் அணி மற்றும் எதிர் அணி என இரு அணிகளாக பிரிந்து, நடத்தப்பட்டுவருகிறது. அந்த விதத்தில் இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டின் தலைவராக அவினாஷ் அசோக் (Avinash Ashok) இருந்துவருகிறார்.
இந்நிலையில் இன்று (24/09/2026) டெமாக்ரஸி அறையில் எதிர் அணி நபர் ராகவ் மற்றும் ஆளும் அணி உறுப்பினர்களான அன்சர் மற்றும் ஜேசன் மத்தியில் வாய் தகராறு இருந்தது. அந்த விதத்தில் இன்று (24/09/2026) பிக் பாஸ் எபிசோடானது சுட சுட உள்ளது. அந்த விதத்தில் ஆளும் அணி உறுப்பினர்கள் வினோத் பாபு, அன்சர் மற்றும் ஜேசன் மூவரும் எதிர் அணி உறுப்பினர்களை கலாய்த்து பேசிய புரோமோ வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: நிவின் பாலியின் பெத்தலேக குடும்ப யூனிட் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்
எதிர் அணி தலைவரையும் உறுப்பினர்களையும் கலாய்த்து பேசிய ஆளும் அணி உறுப்பினர்கள்:
எதிர் அணி உறுப்பினர்கள் மற்றும் ஆளும் அணி உறுப்பினர்கள் மத்தியில் கடும் வாக்குவாதங்கள் இருந்த நிலையில், அதை முடித்து மீண்டும், எதிர் அணி உறுப்பினர்கள் தங்களின் கலந்துரையாடலில் இருந்தனர். இதை வீட்டின் உள்ளே இருந்து பார்த்த வினோத் பாபு, அன்சர் மற்றும் ஜேசன் மூவரும், எதிர் அணி உறுப்பினர்களின் செய்கைகளை கலாய்த்து பேசியிருந்தார். மேலும் எதிர் அணி தலைவர் ராகவ்-வின் திட்டம் மற்றும் அவர்கள் அணியினர் அவரை குழப்பிவிடுவார்கள் என அதில் காமெடியாக அவர் பேசியிருந்தார்.
இதையும் படிங்க: குடும்பத்தின் நற்பெயர்.. அதிலிருந்து விலகி இருக்க முயற்சிக்கிறேன்.. விமர்சனங்கள் குறித்து ஜேசன் சஞ்சய்!
எதிர் அணி தலைவரை நகைச்சுவையாக பேசிய ஆளும் அணி உறுப்பினர்கள் குறித்த புரோமோ:
#Day18 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/LTOzqUKCnQ
— Vijay Television (@vijaytelevision) September 24, 2026
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கியதிலிருந்தே விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது. ஆளும் அணி மற்றும் எதிர் அணி என அரசியல் போலவே இந்த பிக் பாஸ் வீடும் நடத்தப்பட்டுவருகிறது. அந்த விதத்தில் இந்நிகழ்ச்சியானது ஆரம்பத்திலிருந்தே டாஸ்குகள் அதிகமாக கொடுக்கப்பட்ட, சக போட்டியாளர்களிடையேயும் கடுமையான சண்டைகள் இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.