AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Jason Sanjay: இளைய தளபதி என கேட்ட குரல்…. சட்டென ரியாக்ட் செய்த ஜேசன் சஞ்சய்..!

Jason Sanjays Reaction: தென்னிந்திய சினிமாவில் தற்போது இளம் இயக்குநராக மிகவும் பிரபலமாக இருந்துவருபவர் ஜேசன் சஞ்சய். இவரின் இயக்கத்தில் சினிமாவில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் சிக்மா. இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவின்போது பேசிய ஜேசன் சஞ்சயிடம்.. ரசிகர் ஒருவர் சொன்ன வார்த்தை ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

Jason Sanjay: இளைய தளபதி என கேட்ட குரல்…. சட்டென ரியாக்ட் செய்த ஜேசன் சஞ்சய்..!
ஜேசன் சஞ்சய்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 19 Sep 2026 16:38 PM IST

கோலிவுட் சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்து, தற்போது தமிழக முதலமைச்சராக இருந்துவருபவர் விஜய் (CM Vijay). இவரின் மூத்த மகன்தான் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay). இவர் தற்போது இயக்குநராக சினிமாவில் நுழைந்துள்ள நிலையில், இவர் இயக்கத்தில் முதல் முறையாக வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் சிக்மா (Sigma). இதை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். இந்த சிக்மா படத்தில் சந்தீப் கிஷன் (Sundeep Kishan) ஹீரோவாக நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஃபாரியா அப்துல்லா இணைந்து நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்துள்ள நிலையில், இதிலிருந்து இதுவரை மொத்தம் 3 பாடல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதியில், சிக்மா படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது.

அந்த நிகழ்ச்சியில் ஜேசன் சஞ்சய் மேடையில் பேசியிருந்த நிலையில், அப்போது ரசிகர் ஒருவர் அவரை, “இளைய தளபதி” என்று அழைத்திருந்தார். அதற்க்கு ஜேசன் சஞ்சய் கொடுத்த ரியாக்ஷன் என்ன என பார்க்கலாம்.

இதையும் படிங்க: ராக்கா படத்தின் மூலம் இந்திய சினிமாவை உலகளவில் கொண்டு சேர்க்கப்போகிறார்.. அட்லீ குறித்து சிபி சக்கரசவர்த்தி பேச்சு!

ரசிகர் ஒருவரின் கூற்றுக்கு ஜேசன் சஞ்சய் கொடுத்த ரியாக்ஷன்ஸ்:

அந்த நிகழ்ச்சியின் மேடையில் ஜேசன் சஞ்சய் பேசிக்கொண்டிருக்கும்போது, ரசிகர் ஒருவர் “இளைய தளபதி” என கத்தியிருந்தார். உடனே அதை கவனித்த ஜேசன் சஞ்சய், “தேங்க்யூ பா.. தேங்க்யூ” என அதில் சிரித்துக்கொண்டே அவர் பேசியிருந்தார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

சிக்மா படத்தின் ஆடியோ லாஞ்சில் ஜேசன் சஞ்சய் ரியாக்ஷன் குறித்த எக்ஸ் வீடியோ பதிவு:

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள சிக்மா படமானது, சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜேசன் சஞ்சயும் முக்கியமான ரோல் ஒன்றில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கேத்ரின் தெரேசா சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளாராம்.

இதையும் படிங்க: பிக்பாஸ் தமிழில் கடந்த வாரம் விஜய் சேதுபதி கூறிய சர்ச்சை கருத்து… இந்த வாரம் விளக்கம் அளித்துள்ளார்!

இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில், சிறப்பாக இருந்தது. இந்த படமானது பணக் கொள்ளை கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், நிச்சயம் மக்கள் மத்தியில் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்க்கு பின் அவரின் மகா ஜேசன் சஞ்சயும் ஹீரோவாக நடிப்பாரா என்றும் மக்கள் எதிர்பார்கிறார்கள்.

Follow Us