AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸ் தமிழில் கடந்த வாரம் விஜய் சேதுபதி கூறிய சர்ச்சை கருத்து… இந்த வாரம் விளக்கம் அளித்துள்ளார்!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தற்போது இரண்டு வாரங்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் விஜய் சேதுபதி பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

பிக்பாஸ் தமிழில் கடந்த வாரம் விஜய் சேதுபதி கூறிய சர்ச்சை கருத்து… இந்த வாரம் விளக்கம் அளித்துள்ளார்!
விஜய் சேதுபதிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Sep 2026 14:20 PM IST

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே அதிக அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை 9 சீசன்கள் முடிவடைந்து தற்போது 10-வது சீசன் தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த வகையில் இந்த 10-வது சீசன் கடந்த 6-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு மிகவும் கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். தொடர்ந்து இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சியை மூன்றாவது சீசனை தொடங்கி நடைப்பெற்று வருகின்றது. இவர் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் அவர் முன்னதாக பேசும் விசயங்கள் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியதா என்பது கேள்வியை எழுப்பி வந்தாலும் கடந்த வாரம் தலைமை பண்பு குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் விஜய் சேதுபதி பேசியது தமிழக முதலமைச்சர் தளபதி விஜய் குறித்து என்று இணையத்தில் பரவி பல எதிர்ப்புகளையும் அவர் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி குழு தங்கள் தரப்பில் இருந்து விளக்கத்தையும் கூறியது. மேலும் தற்போது வெளியான புரோமோ வீடியோவில் விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.

பிக்பாஸ் தமிழில் கடந்த வாரம் விஜய் சேதுபதி கூறிய சர்ச்சை கருத்து:

அதன்படி இன்று 13-வது நாளிற்கான முதல் புரமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதன்படி அந்த வீடியோவில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது, இந்த நிகழ்ச்சியில் பேசப்படும் கருத்துகள் அனைத்தும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் இந்த வீட்டில் உள்ள போட்டியாளர்களை குறித்தது மட்டுமே. மேலும் இந்த கருத்துகள் வெளியுலக வாழ்க்கை மற்றும் வெளியுலகத்தில் உள்ள எந்த அமைப்பையும் குறிப்பிட்டு பேசியது அல்ல என்று தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பிக் பாஸில் லட்சுமி பிரியா மற்றும் சாந்தினியுடன் மூடும் பகை – வைரலாகும் புரோமோ!

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… துருவ் விக்ரமின் ஜாக்கி.. ‘First Move’ ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு!

Follow Us