The Paradise: கயாடு லோஹர் வில்லனா?.. தி பாரடைஸ் பட புது போஸ்டரை பகிர்ந்த படக்குழு!
The Paradise Movie New Poster: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் நானி. இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் புதிய படம்தான் தி பாரடைஸ். இப்படம் ரிலீஸ் நெருங்கிய நிலையில், கயாடு லோஹருடன் கூடிய புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
டோலிவுட் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகனாக இருந்துவருபவர் நேச்சுரல் ஸ்டார் நானி (Nani). இவரின் நடிப்பில், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இவரின் நடிப்பில் இறுதியாக 2025ம் ஆண்டில் ஹிட் 3 (HIT 3) படமானது வெளியான நிலையில், அதையடுத்து இவரின் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம்தான் தி பாரடைஸ் (The Paradise). இதை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா (Srikanth Odela) இயக்க, ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. இதில் அனிருத் (Anirudh) இசையமைத்துள்ள நிலையில், இதுவரை இப்படத்திலிருந்து இரு பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தின் பாடல்கள் தற்போதுவரையிலும் ட்ரெண்டிங்கில் இருந்துவரும் நிலையில், படத்தின் வெளியீட்டின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதியில் வெளியாக காத்திருக்கும் நிலையில், அதை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது.




இதையும் படிங்க: ராஜமௌலியுடன் வேலை செய்த எனது சக நடிகர்கள் என்னை பயமுறுத்தினார்கள் – மகேஷ் பாபு!
கயாடுவுடன் இருக்கும் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட தி பாரடைஸ் படக்குழு:
Jadal & Subbu ❤️
Their love is unlike anything you’ve seen before ❤🔥8 DAYS TO GO for #TheParadise 💥💥
GRAND RELEASE WORLDWIDE ON 24⋆09⋆26 pic.twitter.com/2GepLfDHg7
— THE PARADISE (@TheParadiseOffl) September 16, 2026
இந்த போஸ்டரில் நடிகர் நானியுடன், கயாடு லோஹர் புகைபிடிக்கும் வகையில் இருக்கும் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை பார்க்கும்போது கயாடு லோஹர் இப்படத்தில் நெகட்டிவ் வேடத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது. ஆனால் இந்த போஸ்டரின் கீழ் படக்குழு பகிர்ந்த வசனத்தில், “அவர்களுடைய காதல் நீங்கள் இதுவரை கண்டிராதது போன்றது” என அதில் பகிரப்பட்டுள்ளது. அதனால் இதில் அவர் வில்லனா அல்லது நடிகையா என படம் வெளியாகும்போது தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தர்மன் பட 3வது ஷெட்யூல் ஷூட்டிங்கில் இணைந்த ரஜினிகாந்த்.. அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட வீடியோ!
தி பாரடைஸ் பட ட்ரெய்லர் வெளியாகுமா?
இந்த தி பாரடைஸ் படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் அதிரடி கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நானி, கயாடு லோஹர், கீர்த்தி சுரேஷ், மோகன் பாபு மற்றும் பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதியி உலகமெங்கும் வெளியாகும் நிலையில், இதன் ட்ரெய்லர் வெளியாகாது என வட்டாரங்கள் கூறுகிறது. இது குறித்து படக்குழு எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.