மலையாள பிக்பாஸில் நடந்த அந்த விசயம் தமிழ் பிக்பாஸில் நடக்குமா? என்ன விசயம் தெரியுமா
Bigg Boss Tamil Season 10 | இந்த முறை இந்திய மொழிகளில் ஒரே நாளில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் மலையாள பிக்பாஸில் புது முன்னெடுப்பை எடுத்துள்ளனர். அதே போல தமிழிலும் நடக்குமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆங்கிலத்தில் பிக் பிரதர் என்ற பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி தற்போது இந்திய மொழிகளில் பிக்பாஸ் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய இந்த நிகழ்ச்சி இந்திய மக்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இந்தி மொழியில் தற்போது 20-வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்ற நிலையில் தென்னிந்திய மொழிகளில் கன்னடத்தில் 13-வது, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 10-வது சீசன் மற்றும் மலையாள மொழியில் தற்போது 8-வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. தொடர்ந்து வெற்றிகரமாகா ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி இந்த 2026-ம் ஆண்டில் அனைத்து மொழிகளிலும் ஒரே நாளான செப்டம்பர் 06-ம் தேதி தொடங்கி தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் வெளியுலக தொடர்பு இல்லை என்றாலும் சில சலுகைகள் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிற்கு ஸ்மோக்கிங் ஏரியா என்ற ஒரு பகுதி உள்ளது. இது வெளியுலக வாழ்க்கையில் செயின் ஸ்மோக்கர்களாக உள்ள போட்டியாளர்களுக்கு உள்ளே புகைப்பிடிக்கு வசதியை நிகழ்ச்சி குழு செய்து வைத்து இருக்கும். ஆனால் அதனை கேமராவில் பதிவு செய்து ஒளிபரப்ப மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாள பிக்பாஸில் நடந்த அந்த விசயம் தமிழ் பிக்பாஸில் நடக்குமா?
இந்த நிலையில் மலையாள பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நடந்த ஒரு சம்பவர் தற்போது இந்தியாவில் உள்ள பிக்பாஸ் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி பிக்பாஸ் மலையாளம் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் இரண்டு பேர் மட்டுமே புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தனர். அவர்கள் இருவரும் தங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்றும் இங்கு புகைப்பிடிக்கும் அறை வேண்டாம் என்று அவர்கள் கூறியதால் இந்த சீசனில் புகைப்பிடிக்கும் அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.




இந்த செய்தி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் மற்ற மொழிகளிலும் அந்த ஸ்மோக்கின் அறை மூடப்படுமா என்பதுகுறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் தமிழ் மொழியிலும் இந்த நிகழ்வு நடந்தால் நன்றாக இருக்கும் என்று கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் யாரும் தாக்க வேண்டாம் – இயக்குநர் சீனு ராமசாமி