பிக்பாஸில் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது… தந்திரமாக ஆடும் பெண்கள் – வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து அனைத்து விசயங்களுக்கும் டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த டாஸ்குகளில் போட்டியாளர்கள் தந்திரமாக விளையாடுவது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் ரியாலிட்டு ஷோவாக உள்ளது பிக்பாஸ் தமிழ். இந்த நிகழ்ச்சியில் 9 சீசன்கள் முன்னதாக ஒளிபரப்பாகி தற்போது 10-வது சீசன் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது 19 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சி தொடங்கிய போதே 19 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டு பேர் வெளியேறினர். பிறகு 2 போட்டியாளர்கள் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சிக்குள் வைல்கார்ட் போட்டியாளராக நுழைந்துள்ளர். இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக அளவில் டாஸ்குகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் புதுப் புது டாஸ்குகளை விளையாடும் போட்டியாளர்கள் தந்திரத்துடன் விளையாடுவது பார்வையாளர்களிடையே நிகழ்ச்சியின் மீது ஆர்வத்தை தூண்டும் விதமாக உள்ளது.
அதன்படி இந்த நிகழ்ச்சி முதல் வாரத்தை முடிவடைந்து இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதில் நாமினேஷன் ஃப்ரீ டாஸ்குகள் என பல வைக்கப்படுகின்றது. அதன்படி இன்று பிக்பாஸ் நிகழ்ச்சி குழு மூன்று புரோமோ வீடியோக்களை வெளியிட்டுள்ளது. அதில் தற்போது மூன்றாவதாக வெளியான புரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.




பிக்பாஸில் தந்திர ஆட்டத்தை ஆடும் பெண்கள்:
அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் மூன்றாவது புரோமோ வீடியோவில் நாக் நாக் என்ற டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது குறித்து தெரிகிறது. அதிலும் குறிப்பாக போட்டியாளர்கள் முத்தழகி மற்றும் லக்ஷ்மி பிரியா இருவரும் தந்திரமாக விளையாடுவது பார்வையாளர்களை மட்டும் இன்றி போட்டியாளர்கள் இடையே சர்ப்ரைஸாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… தலைமை பண்பு குறித்து பேசிய விஜய் சேதுபதி – சர்ச்சைக்கு விஜய் டிவி விளக்கம்
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day9 #Promo3 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/G0QI4e2B7P
— Vijay Television (@vijaytelevision) September 15, 2026
Also Read… பிக்பாஸில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் ஆனந்தி – லக்ஷ்மி பிரியா… வைரலாகும் வீடியோ