AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தலைமை பண்பு குறித்து பேசிய விஜய் சேதுபதி – சர்ச்சைக்கு விஜய் டிவி விளக்கம்

Vijay TV Issues Clarification : பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து விஜய் டிவி நிர்வாகம் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

தலைமை பண்பு குறித்து பேசிய விஜய் சேதுபதி – சர்ச்சைக்கு விஜய் டிவி விளக்கம்
விஜய் சேதுபதி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 15 Sep 2026 07:25 AM IST

பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய விவகாரம் சர்ச்சையானதையடுத்து விஜய் டிவி நிர்வாகம் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழச்சிகளில் ஒன்றான பிக்பாஸில் கடந்த வார இறுதியில் போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்து விஜய் சேதுபதி பேசினார். அப்போது அந்த வார தலைவரான சாத்திகாவிடம் பேசிய விஜய் சேதுபதி தலைமை பண்பு குறித்து பேசியது சர்ச்சையானது.

தலைமை பண்பு குறித்து பேசிய விஜய் சேதுபதி

நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, உண்மையான தலைமைப் பண்பு என்றால் என்னவென்று தெரியாமல், சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும், பின்னர் சவால்களும் பொறுப்புகளும் உருவாகும்போது எதிர் அணி மீது பழியைப் போட்டுவிட்டுக் களத்தை விட்டுத் தெறித்து ஓடுவதும் ஒரு தலைவனுக்கு அழகல்ல. அதெல்லாம் ஏமாற்று வேலை என்று பேசியிருந்தார். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க : நடிகை பார்வதியின் பிரதம திருஷ்டிய குட்டக்கர் படத்தை கொண்டாடும் ரசிகர்கள்

குறிப்பாக விஜய் சேதுபதி பேச்சு தமிழக முதல்வர் விஜய்யை குறிப்பிடுவதாக தவெகவினரும், முதல்வர் விஜய்யின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் விஜய் சேதுபதி குறித்த மீம்ஸ்களை பகிர்ந்து அவருக்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அவருக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்க, அவருக்குச் சட்ட ரீதியாகத் துணை நிற்போம் என அதிமுக எம்.பி. இன்பதுரை தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்கு விஜய் டிவி விளக்கம்

 

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதப் பொருளாக மாறியதைத் தொடர்ந்து, விஜய் டிவி நிர்வாகம் இதுகுறித்து விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. விஜய் டிவி சார்பில் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்ட பதிவில், பிக்பாஸ் தமிழ் சீசன் 10 என்பது அதன் நிர்ணயிக்கப்பட்ட கட்டமைப்பு, கருப்பொருள்கள் மற்றும் விளையாட்டுச் சூழலுக்குள் வழங்கப்படும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியில் இடம்பெறும் சூழ்நிலைகள், உரையாடல்கள், உணர்வுகள் மற்றும் எதிர்வினைகள் அனைத்தும் நிகழ்ச்சியின் வளர்ந்து வரும் கதையோட்டத்தின் ஒரு பகுதியாகும். அவை நிகழ்ச்சிக்குள்ளேயே நிகழும் சூழலின் பின்னணியிலேயே புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

இந்நிகழ்ச்சியில் இடம்பெறும் எந்தவொரு குறிப்போ அல்லது வெளிப்பாடோ, நிகழ்ச்சிக்கு வெளியேயுள்ள எந்தவொரு நபர், அமைப்பு, நிறுவனம், சித்தாந்தம் அல்லது சூழ்நிலையைக் குறிப்பதாகவோ, ஆதரிப்பதாகவோ அல்லது கருத்து தெரிவிப்பதாகவோ கருதப்படக்கூடாது. இந்நிகழ்ச்சி மற்றும் இதன் உத்தேசிக்கப்பட்ட பொழுதுபோக்குச் சூழலைத் தாண்டிச் செய்யப்படும் எந்தவொரு விளக்கமோ அல்லது தொடர்புகளோ எந்தவொரு உள்நோக்கமோ அல்லது அதற்கு ஆதரவானதோ அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us