AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கும்பலில் கோவிந்தா போடுவது யார்? போட்டியாளர்களின் கருத்து

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 தொடங்கி இன்றுடன் ஒரு வாரம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் கும்பலில் கோவிந்தா போடுபவர்கள் யார் என்று பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கும்பலில் கோவிந்தா போடுவது யார்? போட்டியாளர்களின் கருத்து
பிக்பாஸ் தமிழ் சீசன் 10Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Sep 2026 16:19 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த 06-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு தொடங்கியது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சி 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து புதுப் போட்டியாளரை வைல்கார்ட் போட்டியாளராக உள்ளே வந்தனர். அதனைத் தொடர்ந்து போட்டி தொடங்கிய முதல் நாளில் இருந்து சுறுசுறுப்பாக செல்கின்றது. மேலும் போட்டி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் பல போட்டிகள் நடத்தப்படுகின்றது. அதன்படி வீட்டின் கேப்டனை தேர்வு செய்வதற்கே தொடர்ந்து பல கட்டப் போட்டிகள் நடைப்பெற்று பிறகே கேப்டன் யார் என்பதை தேர்வு செய்தனர். அதே போல ஒவ்வொரு போட்டியையும் இதுவரை இல்லாத மாதிரி புது புது விசயங்களை வைத்து நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது வெளியேறிய சாவினியா வேலு வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 18 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளே உள்ளனர். மேலும் இந்தப் நிகழ்ச்சியில் இன்று விஜய் சேதுபதியின் எபிசோட் ஒளிபரப்பாகின்றது. அதில் அவர் போட்டியாளர்களிடையே தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பி வருகிறார்.

பிக்பாஸ் தமிழில் கும்பலில் கோவிந்தா போடுவது யார்?

அந்த வகையில் தற்போது நிகழ்ச்சி குழு வெளியிட்ட மூன்றாவது புரோமோ வீடியோவில் இந்த வீட்டில் கூட்டத்தில் கோவிந்தா போடுவது யார் என்றும் அவர்களால் தனித்து செயல்பட முடியாது என்றும் கேள்வி கேட்டார். அதற்கு பெரும்பான்மையான போட்டியாளர்கள் முனியம்மா மற்றும் மணிவண்ண்னின் பெயரை குறிப்பிடுகிறார்கள். ஆனால் அவர்களின் காரணம் சரியாக இல்லை என்பதால் அதனை நீங்களே யோசித்து பாருங்கள் என்று கூறுகிறார். அந்த வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… Nani: பான் இந்திய படம் என அழைக்க விரும்பவில்லை.. முதல் உரிமை தெலுங்கு தான் – நானி!

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட வீடியோ:

Also Read… பிக்பாஸில் சாதிகாவிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்கும் விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ

Follow Us