Seyon: மனமா படையல் தயாராகிட்டு இருக்கு… சிவகார்த்திகேயனின் சேயோன் பட 2வது ஷெட்யூல் ஷூட்டிங் நிறைவு!
Seyon Second Schedule Ends: சிவகார்த்திகேயனின் நடிப்பில் தமிழில் உருவாகிவரும் புத்தம் புது ஆக்ஷன் திரைப்படம்தான் சேயோன். இந்த படத்தின் 2வது கட்ட ஷூட்டிங் மதுரையில் சிறப்பாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில், இந்த ஷூட்டிங் நிறைவடைந்ததாக படக்குழு அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.
தென்னிந்திய மொழிகளில் நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து மிகவும் பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக சுதா கொங்கராவின் (Sudha Kongara) நடிப்பில் பராசக்தி (Parasakthi) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்த நிலையில், இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் இணைந்த இயக்குநர்தான் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan). ராதிகா சரத்குமாரின் தாய் கிழவி (Thaai Kizhavi) என்ற படத்தை இவர் இயக்கியிருந்த நிலையில், அதை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். அவரின் இயக்குதல் பிடித்துப்போன சிவகார்த்திகேயன் உடனடியாக அவரின் இயக்கத்தில் சேயோன் (Seyon) என்ற திரைப்படத்தில் இணைந்தார்.
இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan) இசையமைத்துவருகிறார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்களும் சிறப்பாக உருவாகியுள்ளதாம். இந்தப்படத்தின் 2வது ஷெட்யூல் ஷூட்டிங் மதுரையில் தொடங்கியதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: டிசி பட மாபெரும் ஹிட்.. படக்குழுவினருக்கு உயர்ரக BMW காரை பரிசாக வழங்கிய கலாநிதிமாறன்!
சிவகார்த்திகேயனின் சேயோன் திரைப்படத்தின் 2வது கட்ட ஷூட்டிங் நிறைவு குடித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
வீரத்தின் வெற்றிப் பயணத்தில் இரண்டாம் கட்டம் நிறைவு#சேயோன் #Seyon #VetrivelVeeravel #Varendi#KamalHaasan #Sivakarthikeyan@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Dir_SivakumarM @Music_Santhosh @Seeman4TN @anbariv #Disney #BhagyashriBorse @RajbShettyOMK @RKFI… pic.twitter.com/u8heLq7Erl
— Raaj Kamal Films International (@RKFI) September 11, 2026
இந்த வீடியோவில் நடிகர் சிவகார்த்திகேயன் அசல் மதுரை காரனாகவே நடித்துள்ளாராம். இதில் அவர் மதுரை உடல்மொழியில், மதுரை பேச்சுவழக்கில் நடித்துள்ளார். இதில் அரசியல்வாதி சீமான் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளாராம். மேலும் பாலா சரவணன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும் இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளனர். இந்த படத்தின் 2வது ஷெட்யூல் நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ரோமியோ பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் புது படத்தில் இணையும் ரவி மோகன்!
சிவகார்த்திகேயனின் சேயோன் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது:
சிவகார்த்திகேயன் ஜோடியாக இப்படத்தின் தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில், முதல் பாடல் விரைவில் வெளியாகிறதாம். ஆரம்பத்தில் இப்படம் 2026ம் ஆனது அக்டோபர் 2ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் ஷூட்டிங் முழுமையாக நிறைவடையவில்லை. அதனால் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.