AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஓடிடியில் வெளியாகி உள்ள மாதவனின் ஜிடிஎன் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

OTT Review For The GDN Movie | நடிகர் ஆர் மாதவன் நடிப்பில் தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படம் ஜிடிஎன். இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

ஓடிடியில் வெளியாகி உள்ள மாதவனின் ஜிடிஎன் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
ஜிடிஎன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Sep 2026 16:50 PM IST

பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் ஆர். மாதவன். இவர் தொடர்ந்து படங்களில் நாயகனாக மட்டும் இன்றி மற்ற வேடங்களிலும் நடித்து வருகிறார். மேலும் நடிகர் மாதவன் கடந்த சில படங்களில் அதிக அளவில் பயோகிராஃபியை மையமாக வைத்து நடித்து வருகிறார். அதன்படி சமீபத்தில் அவர் இந்தியாவில் மிகவும் முக்கியமான நபராக உள்ள ஜிடி நாய்டுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படத்தில் நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தை இயக்குநர்  கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 07-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஆர். மாதவன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா, நந்தலால், டீஜே அருணாசலம், ஷீலா, கருணாகரன், முரளிதரன், அதிதி பாலன், மோகன் ராமன், கனிஹா, ரமேஷ் திலக், கார்ல் ஆண்ட்ரூ ஹார்டே, ரிச்சர்ட் பக்தி க்ளீன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

Also Read… பிக்பாஸ் வீட்டில் கேப்டன் போட்ட சட்டத்தால் சிறையில் அடைக்கப்பட்ட முனியம்மா – வைரலாகும் வீடியோ

மாதவனின் ஜிடிஎன் படத்தின் கதை என்ன?

இந்தப் படத்தில் மாதவன் ஜிடி நாயுடுவாக நடித்து உள்ளார். இந்தியாவில் மிக முக்கியமான நபராக இருந்த அவர் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் எவ்வளவு முக்கிய பங்கை ஆற்றியுள்ளார் என்பது குறித்து இந்தப் படத்தில் பேசியுள்ளனர். மேலும் ஜிடி நாய்டுவின் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முன்னேற்றத்தில் எவ்வளவு தடைகள் இருந்தது என்றும் அதனை அவர் எப்படி சமாளித்தார் என்றும் இந்தப் படத்தில் காட்சிப் படுத்தி உள்ளனர். இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. அதன்படி ஜிடி நாய்டு படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… Jason Sanjay: என் அம்மாவிடம் அதை முதலில் சொன்னேன் – இயக்குநர் ஜேசன் சஞ்சய்!

Follow Us