வீட்டு தலைவரை எதிர்க்கும் போட்டியாளர்கள்.. லக்சுரி பட்ஜெட் டாஸ்கில் நடந்த சம்பவம் – பிக் பாஸ் 10 2-வது நாளில் வெடித்த சண்டை!
Bigg Boss Tamil 10: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தமிழில் கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 06ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியானது தொடங்கி 2 நாட்களான நிலையில், 2வது நாளில் பிக் பாஸ் வீட்டிற்கு நடக்கும் குழப்பங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பப்பட்டுவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக பிக் பாஸ் (Bigg Boss). இருந்துவருகிறது. 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது மிகவும் சீக்கிரமாக, கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 06ம் தேதியில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் தி காமன் மேன் ஷோ மூலம் நுழைந்த போட்டியாளர்கள் என பலரும் இருகிறார்கள். இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமான முதல் நாளிலே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மேடையிலே மக்களால் ரிஜெக்ட் செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட இதை 4 போட்டியாளர்கள் வெளியேறினார்கள்.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் மொத்தம் 19 போட்டியாளர்களுடன் தொடங்கியுள்ளது. இன்று (08/09/2026) பிக் பாஸ் சீசன் 10 தொடங்கி 2வது நாளாகியுள்ளது. அந்த விதத்தில் இன்று பிக் பாஸ் சீசன் 10ல் நடந்த சம்பவம் குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: முதல் நாளே இரண்டு அணிகளாக பிரிந்த பிக்பாஸ் போட்டியாளர்கள்… வெடிக்கும் பிரச்சனைகள்!
கேப்டன் சாத்விகாவுக்கும் ஜேசனுக்கும் நடந்த வாக்குவாதம்:
#Day2 #Promo1 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/vLdMxOTyVg
— Vijay Television (@vijaytelevision) September 8, 2026
கேப்டனிடம் போட்டியாளர்கள் தினமும் இருவரை மாற்றுமுறையில் தேர்ந்தெடுக்கும் விதமாக, போட்டியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். அதை கேப்டன் சாத்விகா, உங்களின் விவாதத்தை முடித்துவிட்டு என்னிடம் கூறுகள் என அங்கிருந்து சென்றுவிட்டார். பின் மீண்டும் வந்த அவரிடம் ஜேசன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். கேப்டனாக சமாளிக்க தெரியவில்லை என்படுத் போல இவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்படுகிறது. மேலும் அதனால் இந்த ஆட்டம் 2வது நாளிலே சூடுபிடிக்கிறது.
இதையும் படிங்க: பேட்ட படப்பிடிப்பின் போது… த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை மாளவிகா மோகனன்
சாத்விகாவுடன் வாய் தகராறில் ஈடுபடும் முனியம்மாள்
கேப்டன் சாத்விகா ஹஸ்மேட்ஸிடம் சில விஷயங்களை பகிர்ந்துகொண்டிருக்கும்போது, நாமினேஷனுக்காக முனியம்மாளை தேர்ந்தெடுப்பதாக கூறினார். இதனால் கோபமான முனியம்மாள், கேப்டன் சாத்விகா பேசும் வார்த்தைகளுக்கெல்லாம் தனது செய்கையால் கிண்டல் செய்வதுபோலவே செய்கிறார். இது மற்றவர்களை எரிச்சல் செய்யும் விதத்தில் உள்ளது.
லக்சுரி பட்ஜெட் டாஸ்கில் கோட்டைவிடும் பிளாக் பாண்டி:
#Day3 #Promo3 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/ZGRq0dfXOG
— Vijay Television (@vijaytelevision) September 8, 2026
அந்த லக்சுரி பட்ஜெட் டாஸ்கில் கிச்சன் துறையின் ஆட்கள் மட்டுமே பங்கேற்கமுடியும் என்ற நிலையில், பிளாக் பாண்டி வீட்டின் சமையலுக்கான கிராசரிஸை வாங்க நினைக்கிறார். அதில் அரிசியை தேர்ந்தெடுக்க காத்திருந்த நிலையில், கொடுக்கப்பட்ட நேரம் முடிந்தது. இதனால் முதல் வாரத்திற்கான கிச்சன் பொருட்கள் தடைபடுகிறது. இதற்காக பிளாக் பாண்டி கண்ணீருடன் இருக்கும்படியான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது 2வது நாளிலே ஆட்டம் சூடுபிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.