முதல் நாளே இரண்டு அணிகளாக பிரிந்த பிக்பாஸ் போட்டியாளர்கள்… வெடிக்கும் பிரச்சனைகள்!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முதல் நாளே வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்துள்ள நிலையில் அவர்களின் இடையே என்ன சர்ச்சைகள் கிளம்பியது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெறும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ் சீசன் 10. இந்த நிகழ்ச்சி கடந்த 06-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு கோலாகலமாக தொடங்கியது. இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தற்போது நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். தொடர்ந்து ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைந்த ஒரு வாரத்திற்கு பிறகே போட்டியாளர்களிடையே சண்டை நிழவும். ஆனால் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் உள்ளே வந்த முதல் நாளே கேப்டனுக்கான போட்டி நடைப்பெற்றது. அந்தப் போட்டியில் சாத்விகா வெற்றிப் பெற்று பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முதல் வாரத்தின் கேப்டனாக தேர்வானார். இவர் தலைமையில் பிக்பாஸ் வீடு இரண்டு அணிகளாக பிரிந்தது.
பிக்பாஸ் பொருத்தவரை ஒவ்வொரு சீசனிலும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தொடர்ந்து ஏதேனும் புதுப் புது விசயங்களை புகுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் புதிய அறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த அறைக்கு டெமாகிராஷி ரூம் (ஜன நாயக அறை) என்று பெயர் வைத்துள்ளனர்.
Also Read… Sai Pallavi: மாரி 2 படத்தின் ஷூட்டிங்கின்போது தனுஷ் என்ன அப்படி சொல்லிட்டாரு – சாய் பல்லவி பேச்சு!




முதல் நாளே இரண்டு அணிகளாக பிரிந்த பிக்பாஸ் போட்டியாளர்கள்:
அந்த அறையில் கிட்டதட்ட சட்டமன்றம் போல தலைவர், எதிர்கட்சித் தலைவர் மற்றும் ஆளும் அணி, எதிர் அணி என இரண்டு அணிகளாக வீட்டில் உள்ள போட்டியாளர்கள் பிரிந்து பேச வேண்டும். ஆனால் நேற்று முதல் நாளிலேயே பேச்சுவார்த்தை வாக்குவாதமாக வெடித்தது. இந்த நிலையில் இனி வரும் நாட்களில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீடு ஒரு கலவர பூமியாக மாறுவதில் எந்த மாற்றமும் இல்லை என்பது முதல் நாளிலேயே தெளிவாக தெரிந்தது. மேலும் தமிழக சட்டசபை போல செயல்படும் இந்த டெமோகிரஷி அறையில் போட்டியாளர்கள் தமிழக சட்டப் பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்படுவது போலவே செயல்படுகின்றனர். முழுவதும் ரசிகர்களுக்கு சட்டப்பேரவை போலவே இது ஒரு கலகப்பான விசயமாக உள்ளதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read… பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முதல் வார கேப்டன் யார்? வைரலாகும் வீடியோ!