AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அப்டேட்!

Abishan Jeevinth And Shiva Rajkumar Title First Look: அறிமுக இயக்குநராக நுழைந்து, பின் கதாநாயகனாக நடித்து, தற்போது கதாநாயகனாகவே படத்தில் நடித்துவருபவர் அபிஷன் ஜீவிந்த். இவர் சிவராஜ்குமாருடன் புதிய படத்தில் இணைந்து நடித்துவரும் நிலையில், அந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. அந்த விதத்தில் இப்படத்தின் முதல் பார்வை குறித்த ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அப்டேட்!
சிவராஜ்குமார் - அபிஷன் ஜீவிந்த் படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 06 Sep 2026 13:34 PM IST

கடந்த 2025ம் ஆண்டில் வெளியான டூரிஸ்ட் பேமிலி (Tourist family) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தவர் அபிஷன் ஜீவிந்த் (Abishan Jeevinth). இதில் சசிகுமார் (Sasikumar) மற்றும் சிம்ரன் இணைந்து லீட் வேடத்தில் நடித்திருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் அபிஷன் ஜீவிந்த் ஒரு சிறிய வேடத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றிருந்தார். இதன் பின் அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில், வித் லவ் (With Love) என்ற படத்திலும் நயாகனாக அறிமுகமானார். இந்த படமானது இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது. இதன் பின் படத்தில் ஹீரோவாக நடிக்க ஆர்வம் காட்டியிருந்த நிலையில், கன்னட நடிகர் சிவராஜ்குமாருடன் (Shiva Rajkumar) புது படத்தில் நடித்துவந்தார்.

இதில் டூரிஸ்ட் பேமிலி பட நடிகை யோகலட்சுமி நாயகியாக நடித்துவந்த நிலையில், ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்திருந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஏஜிஎஸ் என்டேர்டைமென்ட் நிறுவனத்தின் கீழ் புது படத்தில் இணைத்த ஜெய் மற்றும் பிரியங்கா மோகன்!

சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்தின் கூட்டணி படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

இந்த கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் முதல் பார்வை வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 07ம் தேதியில் வெளியாகுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியாகிவருகிறது. இப்படத்தில் சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்த் இருவருமே லீட் வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படமானது சிறப்பான அப்பா மற்றும் மகனின் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளதாம்.

விரிவாக படிக்க: எனக்கு ஒரு பெரிய வாய்ப்பு.. அரசன் திரைப்படத்தில் நடிப்பது குறித்து பேசிய பிரியங்கா மோகன்!

சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்த் கூட்டணி பட நடிகர்கள்:

இந்த படத்தை அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்க, டிராமா கம்பெனி என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைத்துவரும் நிலையில், சிறப்பாக பாடல்கள் மற்றும் பின்னணி இசை அமைக்கப்பட்டுள்ளதாம். இதில் அபிஷன் ஜீவிந்த், சிவராஜ்குமார்., யோகலட்சுமி, பிக் பாஸ் கானா வினோத் மற்றும் ஷிவானி நகரம் போன்ற நடிகர்களும் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது 2026ம் ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us