AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எனக்கு ஒரு பெரிய வாய்ப்பு.. அரசன் திரைப்படத்தில் நடிப்பது குறித்து பேசிய பிரியங்கா மோகன்!

Priyanka Mohan On Arasan Movie: தென்னிந்திய மொழிகளில் நாயகியாக நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் தமிழில் தொடர்ந்து புது திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அந்த விதத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் நடிக்கும் அரசன் படத்தில் நடிப்பதை உறுதிசெய்துள்ளார். மேலும் பணியாற்றுவது பற்றியும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

எனக்கு ஒரு பெரிய வாய்ப்பு.. அரசன் திரைப்படத்தில் நடிப்பது குறித்து பேசிய பிரியங்கா மோகன்!
அரசன் படத்தில் பிரியங்கா மோகன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 06 Sep 2026 10:28 AM IST

கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து அசத்திவருபவர் பிரியங்கா மோகன் (Priyanka Mohan). இவர் தமிழில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்தின் மூலமாக நாயாகியாக நுழைந்தார்.இந்த படமானது இவருக்கு கொடுத்த நிலையில், இதை தொடர்ந்து தமிழிலும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கியிருந்தார். நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் மேட் இன் கொரியா (Made In Korea). இயக்குநர் ரா.கார்த்திக் (Ra.Karthik) இயக்கத்தில் உருவான இப்படம், நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியிருந்தது. இப்படம் ஓடிடியில் மத்தியில் மற்றும் உலகளாவிய மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இவர் இயக்குநர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கத்தில் மஞ்சணத்தி, கவினுடன் புதிய திரைப்படம் போன்றவற்றில் ஒப்பந்தகமாகியிருந்தார். மேலும் இவர் சிலம்பரசனின் அரசன் படத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

சமீபத்தில் வெற்றிமாறனின் பிறந்தநாளில் ஷூட்டிங்கில் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, அரசன் (Arasan) படத்தில் இருப்பதை உறுதி செய்தார். அதை தொடர்ந்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரியங்கா மோகன் அரசன் படத்தில் நடிக்கும் குறித்தும் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: துல்கர் சல்மானின் இந்த கேம் ரசிகர்களிடையே வொர்க் ஆனதா? ஐ அம் கேம் படத்தை கொண்டாடும் ரசிகர்கள்

அரசன் திரைப்படத்தில் நடிப்பது குறித்து பகிர்ந்த நடிகை பிரியங்கா மோகன்:

நடிகை பிரியங்கா மோகன் அதில், “அரசன் படத்தில் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு ஒரு பெரிய விஷயம். சிலம்பரசன் சாருடன் நான் நடிப்பது இதுவே முதல் முறை, மேலும் இந்தப் படத்தில் ஒரு அங்கமாக இருப்பது ஒரு மாயாஜால உணர்வைத் தருகிறது. அரசன் படத்தில் முதல் முறையாக நான் வட சென்னை வட்டார வழக்கில் பேசப் போகிறேன், நீங்கள் அனைவரும் எனது வட சென்னை வட்டார வழக்கை படத்தில் காண்பீர்கள்.

இதையும் படிங்க: கருப்பனின் ஆட்டம் தொடர்கிறதா? இணையத்தில் வைரலாகும் கருப்பு 2 படத்தின் தகவல்

இதற்கு முன்பு நான் அதை திரைப்படங்களில் கேட்டும் பார்த்தும் மட்டுமே இருந்தேன், ஆனால் இந்தப் படத்திற்காக அதைக் கற்றுக்கொண்டேன். இந்தப் படத்தில் நீங்கள் மிகவும் வித்தியாசமான சிலம்பரசன் சாரைப் பார்க்கப் போகிறீர்கள். அரசன் ஒரு பிரம்மாண்டமான படமாக அமையப் போகிறது” என அதில் தெரிவித்துள்ளார்.

அரசன் திரைப்படத்தில் நடிப்பது குறித்து பிரியங்கா மோகன் நடிப்பது குறித்து வைரலாகும் பதிவு:

பிரியங்கா மோகன் சிறப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். தமிழில் ரொம்ப நாட்களுக்கு பிறகு அரசன் போன்ற பிரம்மாண்ட படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us