துல்கர் சல்மானின் இந்த கேம் ரசிகர்களிடையே வொர்க் ஆனதா? ஐ அம் கேம் படத்தை கொண்டாடும் ரசிகர்கள்
I Am Game movie Review Here | மலையாள சினிமாவில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் படம் ஐ அம் கேம். இந்தப் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியகா மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03-ம் தேதி மலையாள சினிமாவில் வெளியான படம் ஐ அம் கேம். இந்தப் படத்தை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் மலையாள சினிமாவில் முன்னதாக வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது இயக்கத்தில் இறுதியாக மலையாள சினிமாவில் வெளியான ஆர்டிஎக்ஸ் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் நடிகர் துல்கர் சல்மான் உடன் இணைந்து ஐ அம் கேம் என்ற படத்தை உருவாக்கினார். இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் நடிகர் மிஷ்கின் இந்தப் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தை கொண்டாடும் ரசிகர்கள்:
இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்தது மட்டும் இன்றி அவரது தயாரிப்பு நிறுவனமான வேஃபரர் ஃபிலிம்ஸ் சார்பாக படத்தை தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் இரண்டு நாட்களே ஆன நிலையில் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Also Read… Silambarasan: எத பற்றியும் பயப்படாதீங்க.. ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த சிலம்பரசன்!
ஐ அம் கேம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Bet bigger. Play bolder. Catch Dulquer Salmaan in I’m Game this weekend! 💸✨ #ImGameMovie pic.twitter.com/MNBQQvUAwm
— Wayfarer Films (@DQsWayfarerFilm) September 5, 2026
Also Read… சினிமாவில் 18 வருடங்களைக் கடந்த நடிகர் நானி – வைரலாகும் எக்ஸ் தள பதிவு