வெற்றிமாறனின் பர்த்டே.. ராஜன் வகையறா பட ஷூட்டிங் புகைப்படத்தை பகிர்ந்த கென் கருணாஸ்!
Ken Karunas X Post: தமிழ் சினிமாவில் ரசிகர்களால் புகழப்பட்டுவரும் பிரபல இயக்குனர்களில் ஒருவர்தான் வெற்றிமாறன். இவர் இன்று (04/09/2026) தனது பிறந்தநாளை கொண்டடைவரும் நிலையில், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி நடிகர் கென் கருணாஸ், ராஜன் வகையறா பட ஷூட்டிங் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறனின் (Vetri Maaran) இயக்கத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக விஜய் சேதுபதியின் விடுதலை 2 (Viduthalai 2) படத்தை இயக்கியிருந்தார். இந்த படமானது 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகியிருந்தது. இப்படத்திற்கு பின் வெற்றிமாறன் வாடிவாசல் (Vaadivaasal) படத்தில் இணைவதாக கூறப்பட்டிருந்தது, பின் உடனடியாக சிலம்பரசனின் (Silambarasan) நடிப்பில் அரசன் (Arasan) படத்தை இயக்க ஆரம்பித்தார். இப்படத்தின் அறிவிப்புகள் கடந்த 2025ம் ஆண்டு இறுதியிலே புரோமோவுடன் வெளியான நிலையில், ஷூட்டிங்கும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இன்னும் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று (04/09/2026) தனது 42வது பிறந்தநாளை இயக்குநர் வெற்றிமாறன் கொண்டாடிவருகிறார். அந்த விதத்தில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவிக்கும் விதமாக, புகைப்படத்தை பகிர்ந்து கென் கருணாஸ் (Ken Karunaas) வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் “ராஜன் வகையறா” (Rajan Vagaira) பட ஷூட்டிங் புகைப்படத்தை பகிர்ந்துள்ள நிலையில், அது இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: டிசி-யை தான் எனது முதல் படமாக எடுக்க விரும்பினேன் – இயக்குநர் அருண் மாதேஸ்வரன்!
வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்து குறித்து நடிகர் கென் கருணாஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Happy birthday Sir ⭐️ pic.twitter.com/Waxzali93B
— Ken Karunaas (@KenKarunaas) September 4, 2026
இயக்குநர் வெற்றிமாறன் சிலம்பரசனின் அரசன் படத்தை இயக்கிவரும் நிலையில், அந்த ராஜன் வகையறா படத்தையும் இயக்குகிறாராம்.இது தொடராக உருவாகிறதா? என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தில் நடிகரும், இயக்குநருமான கருணாஸ், வட சென்னை படத்தில் அமீர் நடித்திருந்த ராஜன் கதாபாத்திரத்தின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. சிலம்பரசனின் அரசன் படத்தின் ஷூட்டிங் உடன் இப்படத்தின் ஷூட்டிங்கும் நடைபெற்றுவருகிறதாம்.
இதையும் படிங்க: கேரளா பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்த நிவின் பாலியின் “பெத்லகேம் குடும்ப யூனிட்”.. அப்படி என்ன தெரியுமா?
யூத் படத்தை இயக்கி ஹிட் கொடுத்த கென் கருணாஸ்:
நடிகர் கருணாஸின் மகன்தான் கென் கருணாஸ். இவர் சினிமாவில் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி, தற்போது சினிமாவில் ஹீரோவாகவும் நடித்துவருகிறார். இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடத்தில் நடித்துவந்த நிலையில், தனது இயக்கத்தில் யூத் என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார்.
இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இப்படமானது வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பின், ராஜன் வகையறா படத்திலும் மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். மேலும் தனது இயக்கத்திலும், நடிப்பிலும் புது படத்தையும் உருவாக்கவுள்ளாராம்.