AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சூர்யாவின் 50-வது பட இயக்குநர் இவரா? வைரலாகும் தகவல்

Actor Suriya | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் உருவாகி வரும் நிலையில் அடுத்ததாக நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக உள்ள 50-வது படத்தின் இயக்குநர் குறித்த தகவல் வைரலாகி வருகின்றது.

சூர்யாவின் 50-வது பட இயக்குநர் இவரா? வைரலாகும் தகவல்
சூர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Sep 2026 17:52 PM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் சூர்யா நடிப்பில் இதுவரை அடுத்தட்டுத்து கருப்பு மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்து சூர்யா 47 மற்றும் சூர்யா 48 ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது 48-வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த படத்தினை இயக்குநர் டிஜே ஞானவேல் எழுதி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகை கயாடு லோஹர் நாயகியாக நடித்து வருகிறார். தொடர்ந்து பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்து உருவாக உள்ள படங்கள் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சூர்யாவின் 50-வது பட இயக்குநர் இவரா?

அதன்படி நடிகர் சூர்யாவின் நடிப்பில் 49-வதாக உருவாக உள்ள படத்தினை மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ள இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இவர்தான் தற்போது வெளியாகி உள்ள ஐ அம் கேம் படத்தினை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் சங்கர் நடிகர் சூர்யாவின் 50-வது படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் திரைக்கதையை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுத உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read… இயக்குநர் அமீர் நடிக்கும் மாகாளி… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மாரி செல்வராஜ்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… விறுவிறுப்பாக தொடங்கியது கமல் ஹாசனின் புதுப் பட பணிகள் – வைரலாகும் போட்டோஸ்

Follow Us